Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் 4 அன்கேப்டு இந்திய பாஸ்ட் பவுலர்கள்

சென்னை: 2026 ஐபிஎல் ஏலம் வரும் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அணிகளும், தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு திறமையான இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் சையது முஸ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்ட, சிலர் சிஎஸ்கே அணியின் ரெடார்க்குள் வந்துவிட்டனர். அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

1 ஆக்கிப் நபி

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்த வேகப்பந்துவீச்சாளர் நீண்ட காலமாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2025-26 ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அபாரமாகப் பந்துவீசியுள்ளார். 2025-26 SMAT லீக் சுற்றில் ஏழு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, 13.26 சராசரி மற்றும் 7.41 எகானமி விகிதத்துடன் நான்காவது அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.

CSK

2 ராஜ் லிம்பானி

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற லிம்பானி ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அவரது உள்நாட்டு கிரிக்கெட் பயணம் சிறப்பாக தொடங்கி உள்ளது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது டி20 அறிமுகத்திற்குப் பிறகு, இந்த 11 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 17.25 சராசரி மற்றும் 8.85 எகானமியுடன் எடுத்துள்ளார்.2025-26 SMAT தொடரில், ஏழு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, பரோடா அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

3.ஆகாஷ் மத்வால்

ஆகாஷ் மத்வால், சில சீசன்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனத்தை பெற்றார். அதைத் தொடர்ந்து, 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு மாறினார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகச் செயல்படும் சில இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர்.மத்வால் சமீபத்தில் 2025-26 SMAT தொடரில் உத்தரகண்ட் அணிக்காக விளையாடி, ஆறு போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

4.அசோக் சர்மா

ராஜஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அசோக் சர்மா 2025-26 SMAT தொடரில் ஏழு போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, தற்போது அதிக விக்கெட்டுகளை எடுத்தவராக உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நெட் பந்துவீச்சாளராகவும், பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் இருந்தார். இருப்பினும், அவர் இன்னும் ஐபிஎல்லில் அறிமுகமாகவில்லை. அவரது தற்போதைய சிறப்பான ஃபார்ம், சிஎஸ்கே ரேடார்க்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஆட்டத்தின் நடுவில் மற்றும் டெத் ஓவர்களில், பந்தின் வேகத்திலும் மாறுபாடுகளிலும் அணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Story first published: Friday, December 12, 2025, 12:50 [IST]
Other articles published on Dec 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+