Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ரோகித்தும், குயின்டனும் இணைந்தால் கோப்பை உறுதி..மும்பை அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பேச்சு

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணி வீரர்களை தேர்வு செய்த விதம் குறித்து அதன் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தனது வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த ஏலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் குயின்டன் டி காக்கை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

தங்களிடம் வெறும் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் மும்பை அணி குயின் டி காக்கை தட்டிச் சென்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் கடந்த இடங்களில் எதிர்கால திட்டத்திற்காக வீரர்கள் தேர்வு செய்தோம். ஆனால் இம்முறை தற்போது விளையாடக்கூடிய சீசனில் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

Akash Ambani

அதை வைத்து அவர்கள் அணியில் நீண்ட காலம் பயணம் செய்யும் விதமாக வீரர்களை தேர்வு செய்தோம். அந்த வகையில் குயிண்டன் டி காக் வான்கடே மைதானத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவரும், ரோகித் சர்மாவும் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு கோப்பையை வென்று தந்தனர்.

அதை மனதில் வைத்துக் கொண்டு குயிண்டன் டி காக்கை வாங்கினோம். அவர் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் மீண்டும் அளிக்க திரும்பி இருப்பதன் மூலம் எங்களுடைய பேட்டிங் பலமாக மாறி இருக்கின்றது. நாங்கள் ஏலத்திற்கு முன்பே 20 வீரர்களை வைத்திருந்தோம். எனவே கூடுதல் இடத்திற்காக ஒரு ஆப்சன்களாக சில வீரர்களையே தேர்வு செய்தோம்.

இந்த சீசனில் மும்பையில் பிறந்து வளர்ந்த வீரர்களை அதிகம் தேர்வு செய்தோம். இதற்காக தான் ஏலத்திற்கு முன்பே சர்துல் தாக்கூரை வாங்கி இருந்தோம். எங்களுக்கு எப்போதுமே இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ட்ரெண்ட் பவுல்ட், அஸ்வினி குமார் உள்ளிட்ட வீரர்கள் இருக்கின்றனர். இதற்கு கூடுதல் ஆப்ஷனாக தான் நாங்கள் முஹமது இஸ்ஸாரை வாங்கினோம். அதர்வாவும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இது எங்களுக்கு கூடுதல் சாதகமாக நாங்கள் பார்க்கிறோம்.

டேனிஷ் மால்வேர் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தார். தற்போது அவரை நாங்கள் வாங்கி இருக்கின்றோம். இந்த ஏலத்திற்காக நாங்கள் பெரிய அளவு திட்டமிட்டு வீரர்களை வாங்கியுள்ளோம். கேமரன் கிரீன் எங்கள் அணியில் தான் முதல் முறையாக விளையாடினார்.

எங்களிடம் இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாய் தான் இருந்தது. இதனால் அவர் கண்டிப்பாக எங்களுக்கு கிடைக்க மாட்டார் என்று தெரியும். இருந்தாலும் முயற்சி செய்யாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் அவர் பெயர் வந்த உடன் முதல் ஆளாக முயற்சித்தோம். நாங்கள் மனதில் நினைத்த அனைத்து வீரர்களையும் எந்தவித போட்டியும் இன்றி வாங்கி விட்டோம். இதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 16, 2025, 20:07 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+