Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கேவின் ரகசிய திட்டங்களை நான் வெளியே கசிய விட்டேனா? அஸ்வின் விளக்கம்

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டங்களையும் ரகசியங்களையும் தாம் வெளியிட்டேனா என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே சிஎஸ்கே அணி கேமரன் கிரீன் அல்லது ஆண்ட்ரே ரஸிலை வாங்க திட்டமிட்டுள்ளது என்று அஸ்வின் கூறியிருந்தார்.

இதற்கு அடுத்த நாளே, ரஸில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணியின் திட்டம் நிறைவேறாமல் போனது.

R Ashwin

அது மட்டுமில்லாமல் ஏலம் நெருங்க நெருங்க அஸ்வின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு சில clue-க்களை வழங்கினார்.அதில் ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஷார்ட் போன்ற வீரர்களை மறைமுகமாக குறிக்கும் வகையில் இருந்தது. அஸ்வின் பதிவிட்ட இரண்டு clue-க்கும் ஏற்ற வகையில் சிஎஸ்கே அணியும் ஏலத்தில் இந்த இரண்டு வீரர்களை வாங்க முயற்சி செய்தது.

இந்த நிலையில் தனது youtube சேனலில் இது குறித்து பேசிய அஸ்வின், நீங்கள் எல்லாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடக்கும் திட்டங்களையும், ரகசியங்களையும் நான் வெளியே கசிய விடுகின்றேன் என்று நினைக்கிறீர்கள்.அது எப்படி சாத்தியமாகும்? சிஎஸ்கே அணியில் நடக்கும் விஷயம் குறித்து எனக்கு எப்படி தெரியும். சிஎஸ்கே அணியிலிருந்து எனக்கு யாரையும் தெரியாது.

நான் ஒரு காலத்தில் அவர்களுக்காக விளையாடுகின்றேன்.தற்போது நான் அந்த அணியில் இருந்து வெளியே வந்து விட்டேன். நான் உண்மையிலே ஒப்புக்கொள்கின்றேன். சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு ரசிகர்களுடன் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.அப்படி இருக்கும்போது மற்ற அணிகளும் கிரிக்கெட் பார்க்கும், அவர்களும் எந்த வீரர்களை வாங்க வேண்டும்?

மற்ற அணிகள் யாரை வாங்குவார்கள் என்பது குறித்து நிச்சயமாக தெரிந்திருக்கும்.இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .எனக்கு ஒரு வீரரை தெரிந்தால், என்னை போல் ஆயிரம் பேருக்கும் அது தெரியும். எனவே சிஎஸ்கே அணியில் நடக்கும் எந்த விஷயத்தையும் நான் வெளியே கசிய விடவில்லை. உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால், தயவு செய்து அதை நீக்கி விடுங்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 17, 2025, 22:53 [IST]
Other articles published on Dec 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+