Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: அண்ணனை மாதிரி என்னையும் ஏலத்தில் எடுங்க.. சிஎஸ்கேவிடம் கெஞ்சிய 'தம்பி' சுழற்பந்துவீச்சாளர்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் கைவசம் இருக்கிறது. இதனை அடுத்து சிஎஸ்கே அணி மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஒன்பது வீரர்களை தேர்வு செய்யலாம்.

சிஎஸ்கே அணியில் இருந்த அஸ்வின் ஓய்வு பெற்று விட்டார். மேலும் ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்று விட்டார். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் நூர் அகமது என்ற சுழல் பந்துவீச்சாளர் மட்டும்தான் இருக்கின்றார். இதனால் சிஎஸ்கே அணி இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் வாங்க முயற்சி செய்யும்.

CSK

இந்த நிலையில் தான் மினி ஏலத்தில் தம்மை தேர்வு செய்யுமாறு தீபக் சாகரின் தம்பி ராகுல் சாகர் தெரிவித்துள்ளார். 26 வயதான ராகுல் சாகர் சன்ரைசர்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். இந்த நிலையில் ஏலத்திற்கு முன்பு பேசிய அவர் சேப்பாக்கத்தில், என்னுடைய சுழற் பந்துவீச்சு நன்றாக இருக்கும்.

அந்த மைதானத்தில் நான் டீசன்ட்டான ரெக்கார்டை வைத்திருக்கின்றேன். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு ஏற்று அணியாக விளங்கும். இதன் மூலம் பந்து அங்கு எவ்வாறு செயல்படும் என்று எனக்கு நன்றாக தெரியும்.

இது போல் ராஜஸ்தான் என்பது என்னுடைய சொந்த ஊர். எனவே இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அல்லது ராஜஸ்தான் அணி என்னை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். ராகுல் சாஹர் இதுவரை 6 இந்திய டி20 போட்டிகளிலும், 1 ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார்.

இதுவரை சென்னையில் ராகுல் சாஹல் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவருடைய எக்னாமி, 6.19 ஆகும். ராகுல் சாஹர், 79 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த மினி எழுத்தில் ராகுல் சாகரின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Story first published: Tuesday, December 16, 2025, 12:20 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+