மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலத்தில் மொத்தமாக 77 வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஒரு நாள் மட்டும் 215 கோடியே 45 லட்சம் ரூபாய் மொத்தமாக செலவு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற டாப் 10 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீன் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளர் பதிரனா இருக்கிறார். அவரை 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் அன்கேப்ட் வீரரான கார்த்திக் சர்மா உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பரான இவரை 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவருக்கு வெறும் 19 வயது தான் ஆகிறது.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இந்திய அன்கேப்டு வீரரான பிரசாந்த் வீர் உள்ளார். அவரையும் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியிருக்கிறது. இந்த ஏலத்தில் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் லியான் லிவிங்ஸ்டோன் இருக்கிறார். இவரை 13 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஆறாவது இடத்தில் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் இருக்கிறார். இவரை 9 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜாஸ் இங்கிலீஷ் இருக்கின்றார். இவரை 8 கோடியே 60 லட்சம் கொடுத்து லக்னோ அணி வாங்கியுள்ளது.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அக்யூப் தார் இருக்கின்றார். இவரை 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியிருக்கிறது. இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் இருக்கின்றார். இவரை 7 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் ஜேசன் ஹோல்டர் இருக்கின்றார். இவரை 7 கோடி ரூபாய் கொடுத்து குஜராத் அணி வாங்கியது.