Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 U-19 வீரர்களை குறிவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணிகள்..!! கிடைச்சா செம லக்..!!

பெங்களூரு : ஐ.பி.எல் ஏலத்தில் எந்த வீரர்களை எல்லாம் எடுக்க வேண்டும் என்ற பட்டியலை சென்னை அணியும், மும்பை அணியும் தயாரித்துள்ளது.

இதில் இரு அணிகளும் U-19 உலகக் கோப்பையில் விளையாடிய 3 வீரர்களை குறிவைத்துள்ளது. ஆனால் ,சென்னை, மும்பை அணிகளிடம் தலா 48 கோடி ரூபாய் தான் கையிருப்பு உள்ளது.

இதனால் வீரர்களை குறிவைத்து எடுப்பதில் இரு அணி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

ஆல் ரவுண்டர் தேவை

ஆல் ரவுண்டர் தேவை

தற்போது சென்னை அணியிடம் வேகப்பந்து ஆல் ரவுண்டர்கள் இல்லை. பிராவோக்கும் வயதாகி விட்டதால் இளம் வீரர்களை, அதுவும் ஆல் ரவுண்டர்களை குறிவைத்து அணியை தோனி தேர்வு செய்ய உள்ளார். இதே போன்று மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இல்லை என்பதால், இந்தியாவை சேர்ந்த புதிய ஆல் ரவுண்டரை சேர்க்க ரோகித்தும் உள்ளார்.

ராஜ் பவா

ராஜ் பவா

இந்த நிலையில்,இரு அணிகளும் முதலாவது குறிவைத்துள்ள வீரர்கள் ஆல் ரவுண்டர் ராஜ் பவா, டி 20 உலகக் கோப்பையில் அதிகவேக சதம், தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என்று கலக்கியுள்ளார். U19 கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 308 ரன்களும், வேகப்பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளையும் ராஜ் பவா வீழ்த்தியுள்ளார்.

ஹங்கேர்கர்

ஹங்கேர்கர்

இந்திய U 19 அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்க கூடியவர் ராஜவர்த்னே ஹங்கேர்கர். வேகப்பந்துவீச்சிலும் கலக்கி வருகிறார் பேட்டிங்கிலும் சிக்சர்களை பறக்கவிடுகிறார். ஹர்திக் பாண்டியாவின் அனைத்து குணாதிசியங்களும் உள்ள இவர், U19 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிரவீஸ்

பிரவீஸ்

இதே போன்று U19 தென்னாப்பிரிக்க வீரர் பிரவீஸ், ஏபி டிவில்லியர்ஸை கண் முன் நிறுத்துகிறார். நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள், 1 சதம், 3 அரைசதம் என கலக்கும் பிரவீஸ் சுழற்பந்துவீச்சிலும் கலக்கி 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால் இவர் மீது பெங்களூரு அணியின் கண்ணும் உள்ளது.

Story first published: Saturday, January 29, 2022, 16:31 [IST]
Other articles published on Jan 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+