Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலம்.. சிஎஸ்கே நிர்வாகிகள் யாருடன் போனில் பேசுவார்கள் தெரியுமா? வெளியான ருசிகர தகவல்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் சிஎஸ்கே அணி நிர்வாகம் 25 வீரர்களை தேர்வு செய்தது இளமையும், அனுபவமும் கலந்து கலவையாக இந்த அணி தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு ஏலத்தின் போதும் சென்னை அணி நிர்வாகிகள் யாருடனோ தொலைப்பேசியில் பேசி, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகே வீரர்களை தேர்வு செய்வார்கள்.

போன் கால்

போன் கால்

இதுவரை அவர்கள் யாருடன் பேசினார்கள் என்று தெரியாது அல்லவா. அது பற்றி விசாரித்ததில் சில ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலானோர், அது தோனி தான் என்று நினைத்திருப்பார்கள். கிட்ட தட்ட சரி தான்.ஆனால் தோனி மட்டும் அந்த காலில் இருக்க மாட்டார் என்பது தான் ட்விஸ்ட்

சிஎஸ்கே வட்டாரம்

சிஎஸ்கே வட்டாரம்

தோனியுடன் அதே காலில் என். ஸ்ரீனிவாசனும் இருப்பார். தோனி இந்த வீரர்களை எடுக்க பரிந்துரை மட்டுமே செய்வார். ஆனால் இவ்வளவு தொகை போடலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பதெல்லாம் ஸ்ரீனிவாசன் தான் என்கிறது சிஎஸ்கே வட்டாரங்கள்.

சில சமயங்களில்..

சில சமயங்களில்..

சில சமயம், முழு பொறுப்பும் தோனியிடம் இருக்கும். தோனி சொல்வதை தான் அணி நிர்வாகிகள் கேட்பார்கள். முந்தைய ஏலத்தில் பயிற்சியாளர் பிளமிங், தோனியிடம் சில கருத்தை தெரிவிப்பார். அதன் படி முடிவு எடுக்கப்படும். சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தான் பாலம் போல் செயல்பட்டு, அணியை தேர்வு செய்வார்.

ஐதராபாத் காப்பி

ஐதராபாத் காப்பி

மும்பை அணியை பொறுத்தவரை முடிவு எடுக்கும் பொறுப்பு ஆகாஷ் அம்பானியிடம் தான் இருக்கும். பெரும்பாலான அணிகளின் முடிவு எடுக்க கூடியவர்கள், ஏலம் எடுக்கும் இடத்திலேயே இருப்பார்கள். இந்த ஏலத்தில் சிஎஸ்கே யை காப்பி அடித்து அதே போல் போனில் பேசி ஐதராபாத் முடிவு எடுத்தது.

Story first published: Monday, February 14, 2022, 18:39 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+