ஐபிஎல் மெகா ஏலம்..!! சிஎஸ்கே பற்றி அறியாத ருசிகர தகவல்..!! வீரருக்கு ஸ்கெட்ச் போடுவது இப்படி தான்..?
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி செயல்படும் , வீரர்களை எப்படி தேர்வு செய்யும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்டைலில் தான் தோனி, அணியின் வீரரை தேர்வு செய்வாராம். இது முற்றிலும் மற்ற அணிகள் செயல்படும் ஸ்டைலில் இருந்து வித்தியாசமானது.
பொதுவாக ஒரு வீரரை அணிகள் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அடித்த ரன்கள் போன்ற புள்ளி விவரங்களை வைத்து முடிவு செய்யும்.

10 சதவீதம்
இதற்காக ஒவ்வொரு அணியிலும் புள்ளி விவரங்களை சொல்வதற்காகவே தனி நிபுணர்களை வைத்து இருப்பார்கள். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி தான் இவர் வேண்டுமா? வேண்டாமா என்று மற்ற அணிகள் ஸ்கெட்ச் போடும். இதே போன்ற குழு சென்னை அணியிலும் உள்ளது. ஆனால் மற்ற அணிகளில் இவர்களது பங்கு 90 சதவீதம் தான் என்றால், சென்னை அணிக்கு இவர்களது பங்கு 10 சதவீதம் தான்.

வினோதம்
திறமையான வீரர்களை அடையாளம் காணும், சென்னை அணி நிர்வாகம் இவர்கள் அணிக்கு எந்த விதத்தில் தேவைப்படுவார்கள். எந்த இடத்தில் களமிறங்கினால் சரியாக இருக்கும். சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வார்கள் , ஆடுகளம் தொய்வாக இருந்தால் எப்படி செயல்படுவார்கள் என்று மட்டும் தான் பார்க்குமாம்.

இன்று முக்கியம்
சென்னை அணி வீரர்களின் வயதை பார்க்காமல், அவர்களது அனுபவங்களை மட்டும் தான் பார்க்குமாம். திருக்குறள் போல் சொல்ல வேண்டும் என்றால் சென்னை அணி எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், இந்த சீசனில் யாருக்கு தேவை என்று தான் பார்க்குமாம். இதனால் தான் அம்பத்தி ராயுடு, மொயின் அலி, மைக்கேல் ஹசி , வாட்சன் போன்ற வீரர்களை சென்னை அணி தேர்ந்து எடுக்குமாம்.

முழு சுதந்திரம்
இன்னும் சொல்ல போனால், இந்த வீரர் இப்படி தான் விளையாடுவார், இவர் நமக்கு தேவையில்லை என்று ஒற்றை வார்த்தையில் அணியின் ஆலோசனை கூட்டத்தில் முடித்துவிடுவாராம். தோனியின் கணிப்பு கிட்டதட்ட 85 சதவீதம் வரை சரியாக இருக்கும் என்பதால் உரிமையாளர் ஸ்ரீ0னவாசனும் தோனிக்கு முழு சுதந்திரத்தை தந்துவிடுவாராம். இம்முறை பழைய வீரர்கள் மீது தான் தோனியின் கண்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications