Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"குர்னல் பாண்டியா 100 சதவீதம் போட்டியை வென்று தருவார்" யார் சொன்னால்..?? அவரே சொல்லிக்கிட்டாரு..!!

மும்பை: வரும் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் குர்னல் பாண்டியா, தனது ஆரம்ப விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.

இதனால் தம்மை யாரும் எடுக்க மாட்டார்களோ என்னவோ என்ற அச்சம் காரணமாக தற்போது தன்னை பற்றியே பில்டப் தர தொடங்கிவிட்டார் குர்னல்.

ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரரான குர்னல் இந்தியாவுக்காக 19 டி20 போட்டிகளும், 5 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

வென்று தருவேன்

வென்று தருவேன்

குர்னல் பாண்டியாவிடம் செய்தியாளர் ஒருவர் உங்களை ஏன் ஏலத்தில் அணிகள் எடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு குர்னல் பாண்டியா உங்களுக்காக 100 சதவீதம் போட்டிகளை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் வென்று தருவார். இதனை நான் ஓவர் Confidenceல் பேசவில்லை. தன்னம்பிக்கையில் பேசுகிறேன் என்று குர்னல் பாண்டியா கூறினார்.

டீம் மேன்

டீம் மேன்

குர்னல் பாண்டியா அணியில் உள்ள வீரர்களிடம் மோதல் போக்கில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. நான் அப்படிலாம் கிடையாதுங்க, நான் ஒரு டீம் மேன். அணிக்காக மட்டும் தான் சிந்திப்பேன். கோப்பையை வெல்வதே என் நோக்கம் என்று குர்னல் கூறினார்.

ஹர்திக் கேப்டன்ஷி

ஹர்திக் கேப்டன்ஷி

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஆனது எனக்கு மகிழ்ச்சி. அவர் எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். எனினும் ஏலத்தில் என்னை ஹர்திக் பாண்டியா, எடுப்பதும், எடுக்காமல் போவதும் அவர் விருப்பம். சகோதரன் என்பது இதற்கு பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

குர்னல் செயல்பாடு

குர்னல் செயல்பாடு

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 84 போட்டியில் குர்னல் பாண்டியா விளையாடியுள்ளார். இதில் 1143 ரன்களும், 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குர்னல் நல்ல ஆல்ரவுண்டராக பெயர் வாங்கினாலும், கடைசி சீசனில் சொதப்பினார். இந்த நிலையில், குர்னல் பாண்டியாவை சென்னை, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் குறிவைத்து இருப்பதாக தெரிகிறது.

Story first published: Thursday, February 10, 2022, 22:24 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+