Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஐபிஎல் வருவது சந்தேகமே.. கூட்டு சேர்ந்த 2 பெரும் நிறுவனங்கள்.. பக்கா பளான்!

மும்பை: ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதற்கு 2 முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 2 புதிய அணிகளும் இந்த முறை களமிறங்கவுள்ளதால் போட்டிகள் அதிகளவில் இருக்கும்.

அந்த 2 புதிய அணிகளின் மூலம் ரூ.12,725 கோடி வருமானத்தை பிசிசிஐ ஈட்டிய நிலையில் அடுத்த 30 நாட்களில் ரூ.40,000 கோடி வருமானமாக வர காத்துள்ளது.

 3 மடங்கு அதிகரிக்கும் லாபம்

3 மடங்கு அதிகரிக்கும் லாபம்

தற்போது 2018 முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதனை அப்போது ரூ.16,347.50 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஏலத்தில் எடுத்திருந்தது. இதனையடுத்து 2023ம் ஆண்டு ஐபிஎல் முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஏலத்திற்கு தான் ரூ.40,000 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. இது பழைய ஒப்பந்தத்தை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

பிசிசிஐ ஏலம்

பிசிசிஐ ஏலம்

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளதாக கூறினார். மேலும், அதில் இந்த முறை 40,000 கோடிக்கும் மேல் ஏலத்தொகை சுலபமாக எகிறும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

 கூட்டணி சேர்ந்த நிறுவனங்கள்

கூட்டணி சேர்ந்த நிறுவனங்கள்

இந்த ஏலத்திற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் என பல முன்னணி ஜாம்பவான்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். இந்நிலையில் அவற்றினை உடைத்து உரிமத்தை பெற சோனி நிறுவனம் மற்றும் சீ எண்டர்டெயிண்மெண்ட் ( Zee Entertainment) நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளது. இவர்களின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.15,000 கோடியாகும்.

 ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

இரு நிறுவனங்களுக்கு இடையேயும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, டிஸ்னி ஹாட் ஸ்டாருக்கு போட்டியாக வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இவர்கள் நிச்சயம் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தில் கலந்துக்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, December 22, 2021, 21:22 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+