Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சி.எஸ்.கே. பற்றி வெளிவந்த உண்மை..!! தோனிக்கு முன் ஸ்ரீனிவாசன் மனதில் தோன்றிய வீரர்..

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி வந்த பிறகு தான் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தெய்வீக உறவு ஏற்பட்டது.

2008ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். ஏலம் நடந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை.

எப்படியாவது தோனியை எடுங்க என்று கூறினார். இந்த சம்பவமும், அதற்கு பிறகு நடந்த வரலாறும் அனைவருக்கும் தெரிந்ததே.

கடும் போட்டி

கடும் போட்டி

2008 ஆம் ஆண்டு முதல் ஏலத்தின் போது தோனியை எடுக்க சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் ஆறரை கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி தோனியை பெற்றது மொத்தமே அப்போது ஏலத்திற்கு 20 கோடி ரூபாய் வரை தான் ஒரு அணி செலவு செய்ய முடியும். இதில் ஆறரை கோடி தோனிக்கே சென்றது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

தோனிக்கு முன் யார்?

தோனிக்கு முன் யார்?

ஆனால், ஐ.பி.எல். ஏலம் பற்றி செய்திகள் வந்ததும், சென்னை அணியை என். ஸ்ரீனிவாசன் வாங்கிய பிறகு, அவர் மனதில் தோன்றிய முதல் வீரர் தோனி இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஸ்ரீனிவாசன் சென்னை அணிக்கு முதலில் எடுக்க நினைத்த வீரர், அப்போதைய அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் தான்.

சந்திரசேகர்

சந்திரசேகர்

சேவாக், டெஸ்ட் போட்டியை கூட டி20 போட்டி போல் ஆடிய காலம். இதனால் சேவாக் சென்னை அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று சி.எஸ்.கே. உரிமையாளர் ஸ்ரீனிவாசன் நம்பினார். ஆனால், கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தான் ஒற்றை காலில் நின்று, சென்னை அணிக்கு தோனியை எடுங்கள். தோனி தான் சென்னை அணியின் எதிர்காலத்திற்கு சிறந்தவர் என்று கூறியுள்ளார்.

Recommended Video

IPL Mega Auction 2022 : Bravo-க்கு மாற்றாக CSK குறிவைக்க போகும் வீரர்
 காட்ஃபாதர்

காட்ஃபாதர்

தோனியின் பிளஸ், அவரது திறமை குறித்து மறைந்த கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் கூறிய பிறகு தான், ஸ்ரீனிவாசன் தன் முடிவை மாற்றி கொண்டுள்ளார். சந்திரசேகர் மட்டும் அப்படி கூறவில்லை என்றால் இந்நேரம் சேவாக் சென்னை அணியின் காட்ஃபாதராகவும், தோனி மும்பை அணிக்காகவும் விளையாடி இருப்பார்கள்.

Story first published: Tuesday, February 8, 2022, 14:54 [IST]
Other articles published on Feb 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+