Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்துக்கு பிறகு பலமான அணி எது? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பதில்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்துக்கு பிறகு பல்வேறு அணிகளின் அமைப்பும் மாறிவிட்டது. சென்னை, மும்பை உள்ளிட்ட வரர்கள் தங்களது முக்கிய வீரர்களை இழந்துவிட்டனர்.

Recommended Video

IPL Mega Auction | லட்சத்திலிருந்து கோடிகளுக்கு சென்றவர்கள் பட்டியல் | Oneindia Tamil

ஏலத்தில் குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஐதராபாத் போன்ற அணிகள் எல்லாம் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி குவித்துவிட்டனர்.

இதனால் நடப்பு சீசனில் எந்த அணி பலமான அணியாக விளங்குகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மும்பை அணி

மும்பை அணி

இது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர். மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், பொலார்ட் போன்ற வீரர்கள் இருப்பதால் அந்த அணி தான் பலமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப், ஐதராபாத்

பஞ்சாப், ஐதராபாத்

இதே போன்று பஞ்சாப் அணியின் ஷிகர் தவான், மாயங் அகர்வால், ஷாரூக்கான், பாரிஸ்டோ,லிவிங்ஸ்டோன், ஓடியன் ஸ்மித் ஆகியோர் இருப்பதால் அந்த அணியும் பலமாக விளங்குவதாக தெரிகிறது.ஐதராபாத் அணியும் வில்லியம்சன், பூரான், ராகுல் திரிபாதி, ஏய்டன் மார்க்ரம், அப்துல் சமத், வாசிங்டன் சுந்தர் போன்ற வீரர்களம் உள்ளனர்.

காகிதங்களில் பலமான அணி

காகிதங்களில் பலமான அணி

இதே போன்று புதிய அணிகளான லக்கேனா, குஜராத்தும் ஒரு அளவிற்கு புத்திசாலிதனமான அணியை உருவாக்கியுள்ளனர். எனினும் காகிதங்களில் பலமான அணியாக திகழும் அணிகள், களத்தில் கோட்டைவிடும். யார் நெருக்கடியை சமாளித்து புதிய யுத்திகளை வகுத்து, அன்றைய போட்டியில் திறமையை வெளிப்படுத்திகிறார்களோ, அவர்கள் தான் பலமான அணி.

இங்கிலாந்து வாரியம்

இங்கிலாந்து வாரியம்

இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு எது பலமான அணியாக விளங்குகிறது என்று ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கேள்வி எழுப்பிகயுள்ளார். அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், சந்தேகமே இல்லாமல் சென்னை அணி தான் என்று பதில் அளித்தது. இங்கிலாந்து வாரியத்தின் இந்த டிவிட்க்கு சென்னை அணி நன்றி தெரிவித்துள்ளனது.

Story first published: Monday, February 14, 2022, 16:23 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+