Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction- ருதுராஜின் நண்பருக்கு சிஎஸ்கேவில் வாய்ப்பு.. யார் இந்த ராமகிருஷ்ணா? பக்கா ஃபினிஷர்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராமகிருஷ்ண கோஷ் என்ற வீரரை அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இதனை அடுத்து ராமகிருஷ்ண கோஸ் யார் என்று ரசிகர்கள் தேடி வருகிறார்கள். ராமகிருஷ்ண கோஸ் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் ருத்ராட்ச் விளையாடிய அணிக்காக இடம்பெற்றார்.

27 வயதான இவர் வேகப்பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடக்கூடியது. மகாராஷ்டிரா பிரிமியர் லீக் தொடரில் பல முக்கிய கட்டத்தில் கீழ் வரிசையில் வந்து பெரிய சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

ipl auction 2025 csk 2025

140 கிலோ மீட்டர் வேகத்திலும் பந்து வீசக்கூடிய வீரராக ராமகிருஷ்ணா இருக்கின்றார். இதனால்தான் ருதுராஜ் கவனத்தை ராமகிருஷ்ணா ஈர்த்திருக்கிறார். இதனை அடுத்து ருதுராஜ் அணியிடம் இவரை வாங்க சொல்லி பரிந்துரை செய்திருக்கிறார். இதை அடுத்து ராமகிருஷ்ணாவை சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைத்து அவருடைய திறமையை பரிசோதித்து இருக்கிறது.

இதன் மூலம் ஏலத்தில் அவர் பெயர் வந்த உடனே சிஎஸ்கே அணி அடிப்படை விலைக்கு வாங்கிவிட்டது. ராமகிருஷ்ணா கோஷ் அண்மையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒடிசா அணிக்கு எதிராக ஆடி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 80 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களும் பேட்டிங்கில் எடுத்தார். அது மட்டுமில்லாமல் பந்து வீச்சில் முதலில் மூன்று விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.

தற்போது சையது முஸ்தாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்று நடைபெற்ற சையது முஸ்தாக் அலி ஆட்டத்தில் கூட கேரளா அணிக்கு எதிராக ராமகிருஷ்ண கோஷ் இரண்டு ஓவர் வீசி 20 ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார்.

இதேபோன்று பேட்டிங்கில் ராமகிருஷ்ணா கோஷ் ஐந்து பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என 13 ரன்கள் அடித்து 260 ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார். இதன் மூலம் மகாராஷ்டிரா அணி கேரளாவை வீழ்த்தி இருக்கிறது. இந்த ஆட்டம் முடிந்து சில மணி நேரத்திலேயே சிஎஸ்கே அணி அவரை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 25, 2024, 20:47 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+