ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு ஆண்டு விளையாட தடை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தனது ஒப்பந்தத்தை அவர் புதுப்பிக்கத் தவறியதாலும், வேறு ஒரு அணியுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாலும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மார்ச் 12ம் தேதி தொடங்கும் மூன்றாவது ஐபிஎல் தொடரில் ஜடேஜா விளையாட முடியாது.
இதுகுறித்து ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுப்பிப்பு ஒப்பந்தத்தில் ஜடேஜா கையெழுத்திடவில்லை. மேலும், வேறு சில ஐபிஎல் அணிகளுடன் அவர் ரகசியப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தார். இது வீரர்களுக்கான நடத்தை விதிமீறல் ஆகும்.
எனவே ஜடேஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு ஆண்டுக்கு அவர் எந்த ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications