Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL :கொச்சி அணிக்கு ரூ.538 கோடி தர வேண்டும்.. பிசிசிஐக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: ஐபிஎல் அணிகளில் ஒன்றாக இருந்த கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பிசிசிஐ 538 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் தற்போது பத்து அணிகள் விளையாடி வருவதை நாம் அறிவோம். ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் எட்டு அணிகள் இருந்தாலும், 2010 ஆம் ஆண்டு இறுதியில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்திருந்தது.

Kochi tuskers

அதன் பெயரில் கொச்சியை மையமாக வைத்து கொச்சி டஸ்கர்ஸ் என்ற அணி 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாங்கப்பட்டது. ஜெயவர்த்தனே தலைமையில் களமிறங்கிய கொச்சி டஸ்கர்ஸ் அணியில் ஜடேஜா, மெக்குல்லம், லக்ஷ்மன், ஸ்டீவன் ஸ்மித் போன்ற வீரர்கள் எல்லாம் விளையாடினார்கள்.

இந்த அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்தது. இந்த தருணத்தில் கொச்சி அணியிடம் வங்கி உத்திரவாதம் அளிக்க கோரி பலமுறை பிசிசிஐ சார்பாக நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அப்போது செப்டம்பர் 21ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு தங்களது வங்கி உத்தரவாதத்தை அளிக்கின்றோம் என்று கொச்சி அணி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும் இந்த கடிதத்தை நிராகரித்த பிசிசிஐ வங்கி உத்தரவாதத்தை காட்டவில்லை எனக் கூறி அணியின் உரிமத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இதனை அடுத்து தீர்ப்பாயத்தில், கொச்சி நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. அப்போது பிசிசிஐ செய்தது தவறு எனக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு தீர்ப்பாயம் உத்தரவிட்ட இருந்தது. இதை எதிர்த்து பிசிசிஐ 8 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வந்தது.

தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை அளித்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், கொச்சி அணியின் உரிமத்தை பிசிசிஐ ரத்து செய்தது தவறு என்றும், இதனால் மொத்தம் 538 கோடி ரூபாயை கொச்சி அணிக்கு பிசிசிஐ வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக பிசிசிஐ திறப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, June 18, 2025, 22:56 [IST]
Other articles published on Jun 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+