Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Classics - கடைசி ஓவரில் 3 ரன் அவுட்.. 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. என்ன மாதிரி ஆட்டம்

மும்பை : இந்த ஐ பி எல் மேட்ச் ஒரு இன்னிங்சில் 5 ரன் அவுட்டுக்களை சந்தித்தது.
மேட்சின் கடைசி பந்து வரையில் விறுவிறுப்பிற்கு குறைவு இல்லை.
எந்த அணி ஜெயிக்கப் போகிறது என்று மேட்ச் முடியும் வரையில் சஸ்பென்சாக இருந்தது.

இந்த 5 ரன் அவுட்டுக்களும், ஒரு முக்கிய காரணம் த்ரிலிங் முடிவிற்கு.
இந்த நிகழ்வு ஐ பி எல் போட்டியின் முதல் வருடத்திலேயே ( 2008 ) , ஒரு மேட்சில் அரங்கேறியது.
மும்பை வான்கேடியே மைதானத்தில் 21 மே 2008 ல் நடைப் பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய அணி கிங்ஸ் XI பஞ்சாப். பந்து வீசிய அணி மும்பை இந்தியன்ஸ்.

IPL Classics - 3 Run outs in a final over between MI and Punjab match

முதல் விக்கெட்டை ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் இழந்தாலும், அடுத்த இரண்டு வீரர்கள் பொறுப்பு உணர்ந்து அடினார்கள்.இரண்டாவது விக்கெட் விழுந்தது 14. 5 ஓவரில். ஷான் மார்ஷ் 81 ( 56 பந்துக்கள். 7 x 4 & 4 x 6 )
லுக்கே பொமெர்ஸ்பச் ஜோடி சேர்த்த ரன்கள் 133. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஸ்கோர் 189 / 4. இதில் லுக்கேவின் ஸ்கோர் 79
( 50 பந்துக்கள். 10 x 4 & 3 x 6 )

மார்ஷ், லுக்கே ஜோடி அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி, மும்பை அணி பவுலிங்கை
பந்தாடினார்கள் . சிக்ஸர்களும், பவுண்டரிகளும் நாலா திக்குகளிலும் சென்றடைந்தன. ரன்கள் மளமளவென்று அதிகரித்தன.

சித்தார்த் சித்னிஸ் 2, ஷான் போல்லாக் 1, தில்ஹாரா பெர்னாண்டோ 1
விக்கெட்டுக் கள் எடுத்தனர். 190 ரன்கள் இலக்குடன், மும்பை அணி நம்பிக்கையோடு களம் இறங்கி, சிறப்பாக ஆடினார்கள். முதலில் ஆடிய பஞ்சாப் அணி 17. 4 பொழுது 150 ரன்கள் எடுத்து இருந்தனர். ( 150 / 4 )

கிட்டத்தட்ட அதே சமயத்தில் மும்பை அணி ஸ்கோர் 159 ,17. 1 ஓவரில் (159 / 5 )
இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது, அந்த தருணத்தில்.
கேப்டன் சச்சின் டெண்டுல்கர் நன்றாக விளையாடிக் கொண்டு இருந்தவர் ரன் அவுட் ஆனார். 65 ( 46 பந்துக்களில். 12 x 4 ) பல அருமையயான பவுண்டரிகளை அடித்து, குழுமியிருந்த ரசிகர்களை குஷி படுத்தினார், சச்சின்.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி எல்லையை தொட குறைந்த ரன்கள் இருந்தன. விக்கெடுக்கள் கைவசம் இருந்தன. கடைசி ஓவர் வீசப் பட்டது. அந்த ஓவரில் எதிர் பாராமல் பெரிய ட்விஸ்ட். மும்பை அணி, மூன்று வீரர்களை இழந்தது, அதுவும் எல்லா மூன்று விக்கெட்டுக்களும் ரன் அவுட் முறையில். சித்னிஸ், ஆஷிஷ் நேக்ரா, விக்ராந்த் எல்லிகாட்டி. நிதானித்து ஆடாமல் அவசரப்பட்டு, புரிதல் இல்லாமலும் இந்த மூன்று வீரர்களும் விக்கெடுக்களையும் மேட்சையும் இழந்தனர். மும்பை இந்தியன்ஸ் வீரார்களின் பதட்டம், பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற வாய்ப்பும், வழியும் வகுத்தது.

அவ்வளவு கிட்ட வந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, 1 ரன் வித்தியாசத்தில்.

டெண்டுல்கர் தவிர ரன்கள் அடித்தவர்கள்
அபிஷேக் நாயர் 27,
சனத் ஜெயசூர்யா 20 , டி ஸ்மித் 20.
கிங்ஸ் XI பஞ்சாப் பவுலிங் ஸ்ரீனாத் 2 , யுவராஜ் சிங் 2, பியூ ஷ் சாவ்லா 1.

ஷான் மார்ஷ் ஆட்ட நாயகர்.

இந்த மேட்சில் அந்த 5 ரன் அவுட்டுக்கள், குறிப்பாக கடைசி ஓவரின் 3 ரன் அவுட்டுக்கள், பஞ்சாப் அணி வெற்றி பெற பெரிதும் உதவின என்பது மறக்க முடியாத உண்மை.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, May 20, 2024, 6:01 [IST]
Other articles published on May 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+