Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடன் மோதிய கதை

நவி மும்பை : எதிர்பாராத விதமாக இப்படியும் ஒரு செமி பைனல் மேட்ச். முதலில் ஆடிய சிஸ்கே அணி, அதிக ரன்களை குவித்து எதிரணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை திணற அடிக்கும் என்று பார்த்தால், சி எஸ் கே அணியே ரன்கள் குவிக்க மிகவும் திணறியது.

அதிக பட்ச ரன்கள் எடுத்த மூவர்.பத்திரிநாத் 37 (41 பந்துக்கள் 3 x 4 & 1 x 6 )
கேப்டன் தோனி 30 ( 32 பந்துக்கள் 3 x 4 ) ஸ்ரீகாந்த் அனிருதா 24 ( 15 பந்துக்கள் 1 x 4 & 2 x 6 )

IPL classics - How CSK Beat Deccan chargers in 2010 semi final

ஹைதராபாத் பவுலிங்
ரயன் ஹார்ரீஸ் 3 / 29
மூன்று பவுலர்கள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

முதல், இரண்டாவது, நான்காவது ஓவர்களில் சிஸ்கே வீரர்கள் அளித்த கேட்சுக்களை, டெக்கான் அணி வீரர்கள் நழுவ விட்டனர்.

நான்கு ரன்கள்
ஓவர் 1, 2, 3, 6, 8, 10, 11, 14, 16, 17, 19 ( 4 b ) 20

சிக்ஸர்ஸ்

ஓவர் 3 ( விஜய் மிட்விக்கெட்)
ஓவர் 15 ( பத்திரிநாத் நேராக சென்றது )

ஓவர் 19 (அனிருதா லாங் ஆன் )

ஓவர் 20 ( அனிருதா லாங் ஆன் )

விக்கெட்டுக்கள்

ஓவர் 1 (ஹைடென் 8 )
ஓவர் 4 ( விஜய் 15 )
ஓவர் 5 ( ரெய்னா 2 )
ஓவர் 14 ( தோனி 30 )
ஓவர் 15 ( மோர்கெல் 4)
ஓவர் 19 ( பத்ரிநாத் 37 )
ஓவர் 20 ( அனிருதா 24 )

அதிகம் எதிர் பார்க்கப் பட்ட சி எஸ் கே அணி 20 ஓவர்கள் முடிவில் எடுத்த மொத்த ஸ்கோர் 142 ரன்கள் மட்டும் தான், இந்த முக்கியமான செமி பைனல் மேட்சில். இழந்த விக்கெடுக்கள் 7.

143 ரன்கள் தேவை வெற்றிக்கு என்ற எளிய இலக்குடன், முழு நம்பிக்கையோடு களம் இறங்கினர, டெக்கான் அணி வீரர்கள். அவர்கள் பேட்டிங் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை. விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது. ரன்கள் அதிகமாகவில்லை. சென்னை அணியின் பவுலர் டக் போலிங்கர், பந்துக்களை எதிர் கொள்ள தடுமாறினார்கள், டெக்கான் அணி வீரர்கள். அவர் 4 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தி ஆட்ட வீரர் விருதையும் பெற்றார்.

ஹைதராபாத் அணியின் பேட்டிங்

அன்றெவ் சிமைண்ட்ஸ் 23 ( 22 பந்துக்கள். 3 x 4 )

கிப்ஸ் 18 ( 26 பந்துக்கள். 1 x 4 )

சுமந்த் 16 ( 18 பந்துக்கள். 2 x 4 )

நான்கு விக்கெடுக்கள் வீழ்த்திய போலிங்கர் தவிர பவுலிங்கில் விக்கெடுக்கள் எடுத்த சென்னை வீரர் ஜாக்காட்டி 2 / 44.
நான்கு வீரர்கள் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

டெக்கான் அணியின் வீரர்கள் கில்கிறிஸ்ட், ஹார்ரீஸ் தலா 1 சிக்ஸர் அடித்தனர்.

19.2 ஓவர்களில் டெக்கான் ஹைதராபாத் அணி எல்லா விக்கெட்டுக்களையும் இழந்தனர். எடுத்த ரன்கள்104. 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த சி எஸ் கே அணி இறுதி ஆட்டத்தில் ஆட தகுதி பெற்றது.

நவி மும்பை மைதானத்தில் 22.04.2010 ல் நடைப் பெற்றது, இந்த மேட்ச்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, April 25, 2024, 19:52 [IST]
Other articles published on Apr 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+