சென்னை : சி எஸ் கே , கே கே ஆர் அணிகள் சந்தித்தன இந்த ஐ பி எல் மேட்ச்சில், 28.04.2013, சென்னை ஸ்டேடியத்தில்.விருத்திமான் சஹா, மைக்கேல் ஹஸ்ஸி ஓபன் செய்தனர், சி எஸ் கே பேட்டிங். 10.1 ல் முதல் விக்கெட்டை இழந்தது.
சஹா அவுட். 39 ( 4 x 4 & 2 x 6 ) அணி ஸ்கோர் 103 - 1 . அந்த முனையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார், ஹஸ்ஸி. 59 பந்து க் களில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் சகிதம் இவர் எடுத்த ரன்கள் 95. ஸ்கோர் 158 / 2. ரசிகர்களால் மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்பட்ட ஹஸி, சிஎஸ்கேவிக்கு ஒரு மெக்கானிக் போலவே, பிரச்சினை ஏற்படும் போது எல்லாம், அதனை சரி செய்தார்.

சுரேஷ் ரெய்னா ரன்கள் 44, 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்.
20 ஓவர்கள் முடிவில்
சி எஸ் கே ஸ்கோர் 200 / 3
சுனில் நரின், ரஜத் பாட்டியா தலா 1 விக்கெட்.
கே கே ஆர் அணியின் ஒப்பனர் மன்விந்தர் பிஸ்லா 2 சிக்ஸர்கள், 14 பவுன்டரிகள் உதவியுடன், 61 பந்துக் களில் எடுத்த ரன்கள் 92. இவர் மட்டும் தான் தனியாக நின்று கடைசி வரையில் போராட வேண்டியிருந்தது இவர் தான் 4 வதாக அவுட் ஆனார், 18. 3 ஓவரில்.
மற்ற ஆட்டக் காரர்கள் சரிவர பேட்டிங் விளையாடவில்லை.
மோர்கன் மட்டும் தாக்கு பிடித்து ஆடினார். 22 பந்துக்கள் விளையாடிய இவர் 2 x 4 & 2 x 6 அடித்து 32 ரன்கள்.சி எஸ் கே பவுலிங்கில் 1 விக்கெட் வீதம், வீழ்தியவர்கள் மோஹித் ஷர்மா, கிறிஸ் மொரிஸ், பிராவோ.
இந்த மேட்சின் சிக்ஸர்கள் 11
சி எஸ் கே 6
கே கே ஆர் 5
பவுண்டரிகள் 40
சி எஸ் கே 20
கே கே ஆர் 20
கே கே ஆர் ஸ்கோர். 186 / 4
மைக்கேல் ஹஸ்ஸி ஆட்ட நாயகர்.
சி எஸ் கே அணி 14 ரன்கள் வித்தியாத்தில் வென்றது.
வாசுதேவன், பெங்களூரு