Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL classics - கோலி டக் ஆகி இருந்தா என்ன நடந்திருக்கும்.. சரித்திரத்தை திருப்பி பாருங்க

வெகு விரைவில் இந்த மேட்ச் முடியும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
புது பேட்ஸ்மேன் வந்து நின்று ஆடலாம் என்று யோசிக்கும் முன்பே பெவிலியனுக்கு திரும்பிய காட்சிகள் பரிதாபமாக இருந்தது

பல அருமையான ஷாட்டுகள், பவுண்டரிகள், சிக்ஸர்கள் காண ஆவலுடன் குழுமிய ரசிகர்களுக்கு அவ்வகை சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாக கிடைத்தது.
23.04.22, பிரபோர்ன் ஸ்டேடியும், மும்பை (ஆர்சிபி vs எஸ்ஆர்எச்) முதலில் ஹைதராபாத் அணி, பவுல் செய்ய முடிவு செய்தது.மேட்சில் அதிக ரன்கள் எடுத்தவர் அபிஷேக் ஷர்மா. 47.

IPL classics - RCB all out for 68 runs vs SRH after kohli out for 0

பவுலிங்கில் அசத்தியவர்கள்

டி நடராஜன் 3 / 10
மார்க்கோ
ஜன்சென் 3 / 25
ஜகதீஷ் சுஜித் 2 / 12
புவ்னேஷ்வர்
குமார் 1 / 8
உம்ரான் மாலிக் 1 / 13
ஹர்ஷல்
பட்டேல் 1 / 18

பெங்களூரு அணியில் மூன்று இரட்டைப்படை ரன்கள்.

எஸ் பிரபுதேசாய் 15
க்ளேன் மாக்ஸ்வெல் 13
உபரி ரன்கள் 12

முதல் ஓவர் 5 / 0
ஒரு பவுண்டரி கவர் வழியாக. பவுலர் புவ்னேஷ்வர் குமார். பேட்டிங் டு ப்ளெஸ்ஸிஸ்.

இரண்டாவது ஓவர் ஆர்சிபி அணிக்குஅதிர்ச்சி மேல், அதிர்ச்சி மேல், அதிர்ச்சி. ஆம் இந்த ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது ஆர்சிபி அணி.

பிரிலியண்ட்டாக பவுலிங் செய்தது, ஜன்சென்.

இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்து ஆப்
ஸ்டம்பை சாய்த்தது.
டு ப்ளெஸ்ஸிஸ் அவுட்.

கோலி உள்ளே வந்தார் ஆட்டம் ஆட. ஆரவாரம் வரவேற்றது. அந்த சப்தம் அடங்குவதற்குள் கோலி பெவிலியன் திரும்பினார், முதல் பந்திலேயே அவுட் ஆகி.

கேப்டன் வில்லியம்சன் இரண்டாவது ஸ்லிப் பீல்டரை நிற்க வைத்தார். எதிர்பார்த்தபடியே, விராட் கோலி கேட்ச் கொடுத்தார். பிடித்தது மார்க்ரம்.

விராட் கோலி 'கோல்டன் டக்' சாதனை படைத்தார்.
ஓவரின் கடைசி பந்தில் அடுத்த இடி இறங்கியது.
அனுஜ் ரவாட் அவுட். மறுபடியும் கேட்ச் பிடித்தது அதே மார்க்ரம்.

இரண்டாவது ஓவர் ஸ்கோர்
8 / 3

இந்த கட்டத்தில் ஜன்சென் சாதனை.

1 - 0 - 3 - 3

அழுத்தத்தின் சக்தி
ஆர்சிபி அணி, வீரர்களுக்கு புலப்பட ஆரம்பித்தது.

நான்காவது ஓவரில் 9 ரன்கள் கூடின.

ஜன்சென் பவுலிங்கில் இரண்டு 4 கள்.
அடித்தது க்ளேன் மாக்ஸ்வெல்.
ஸ்கோயர் லெக், கவர் பகுதி.

ஸ்கோர் 20 / 3

எஸ் பிரபுதேசாய் 1
க்ளேன் மாக்ஸ்வெல் 12

5 வது ஓவரில் 5 ரன்கள். விக்கெட் 1

பவுலிங் செய்தது நடராஜன்.

அபாரமான கேட்ச் பிடித்து அசத்தியது வில்லியம்சன். ஓடி, தாவி தரைக்கு மேல் சிறிது இடைவெளியில் எடுத்த கேட்ச். ஆர் சி பி அணி இழந்த விக்கெட்
க்ளேன் மாக்ஸ்வெல்.
12 ( 11 பந்துகள். 2 x 4 )

அடுத்த ஓவரில் ஒரு 4.
கவர் பவுண்டரி. எடுத்தது பிரபுதேசாய்.

7 வது ஓவர் ஸ்கோர் 37 / 4

8 வது ஓவர் ஸ்கோர் 47 / 45 / 4.

வெகு வேகமாக வந்த பந்தை அதை விட வேகமாக பவுண்டரி எல்லைக் கோட்டை மீறி செல்ல வைத்தது , ஷாஹ்பாஸ் அஹ்மத். பவுலர் உம்ரான் மாலிக்.

9 வது ஓவர் பெற்று தந்த ரன்கள் 2.
இந்த ஓவரில் இழந்த விக்கெட்டுகள் 2.

பவுலர் சுசித். பிரபுதேசாய் ஸ்டம்பிங் செய்தவர் பூரன்.
15 ( 20 பந்துகள். 1 x 4 )

அதே ஓவரில் 5 வது பந்து, தினேஷ் கார்த்திக் அவுட். கேட்ச் பூரன்.

ஸ்கோர் 47 / 6

10 வது ஓவரிலும் விக்கெட். உம்ரான் மாலிக் பந்தில் அவுட் ஆனவர், ஷாஹ்பாஸ் அஹ்மத். கேட்ச் பூரன்.
7 ( 1 x 4 )

ஸ்கோர் 49 / 7

12 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 55 / 7

அடுத்த ஓவர் வீசியவர் நடராஜன். முதல் பந்தில் ஹர்ஷல் பட்டேல் அவுட். ஆப் ஸ்டம்ப் பறந்து போய் விழுந்தது.15 வது ஓவரில் 4 ரன்கள் ஆர்சிபி அணிக்கு. ஜன்சென் பந்தில் கவர் பகுதி நோக்கி செலுத்தியவர் ஹசரங்கா.

16 வது ஓவர். ஹசரங்கா க்ளீன் போல்ட். ஸ்டம்பு சாய்ந்தது. பவுலர் நடராஜன்.
8 ( 19 பந்துகள். 1 x 4 )

ஓவர் முடிவில் ஸ்கோர். 68 /9

17 வது முதல் பந்தில் ஆர்சிபி அணி ஆல் அவுட். புவ்னேஷ்வர் குமார், சிராஜ் விக்கெட்டை வீழ்த்தினார்.ஹைதராபாத் அணி எளிதான இலக்கை அடையும் முனைப்புடன் களம் இறங்கினர்.

முதல் ஓவர் ஸ்கோர் 10 / 0
ஹஸ்ஸல்வுட் பந்தை பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தவர் அபிஷேக்.

3 வது ஓவரில் 13 ரன்கள். சிராஜ் பவுலர்.
அபிஷேக் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் அருமையான சிக்ஸர்.
அடுத்த பந்து பைன் லெக்கில் ஒரு 4.

4 ஆம் ஓவர். ஹஸ்ஸல்வுட் பந்தை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டது அபிஷேக்.
மிட் ஆன். தர்ட்மன்.

மீண்டும் 2 பவுண்டரிகள்.ஹர்ஷல் பவுலிங். அபிஷேக் பேட்டிங். கவர். எக்ஸ்ட்ரா கவர் திக்கில்.

5 வது ஓவர் ஸ்கோர்
42 / 0

வில்லியம்சன் 3*
அபிஷேக் 37*

6 வது ஓவர் 14 ரன்கள்.
ஹஸ்ஸல்வுட் ஓவர் போட்டார். வில்லியம்சன் 2 பவுண்டரிகள்.
அபிஷேக் 1.

வில்லியம்சன் அடுத்த ஓவரில் ஒரு 4. மிட் ஆன்.

ஸ்கோர் 63 / 0
வில்லியம்சன் 14*
அபிஷேக் ஷர்மா 47*

8 வது ஓவரில் அபிஷேக் அவுட். கேட்ச் அனுஜ் ரவாட் . பவுலர் ஹர்ஷல் பட்டேல்.
47 ( 28 பந்துகள். 8 x 4 & 1 x 6 )

அந்த ஓவரின் கடைசி பந்தை ஸ்கோயர் லெக் திக்கில் சிக்ஸர் அடித்து மேட்சை முடித்து வைத்தவர் ட்ரிபாதி

ஸ்கோர் 72 / 1
ட்ரிபாதி 7* .வில்லியம்சன் 16*

மார்க்கோ ஜன்சென்.
ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

சன் ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ராயல் சேலன்ஞர்ஸ் அணியை வென்று சாதனை படைத்தது.

ஹைதராபாத் அணியின் பவுலர்கள் அட்டகாசமான பவுலிங் திறமையால் விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே அளிக்காமல் செய்து விட்டார்கள்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, April 7, 2024, 14:37 [IST]
Other articles published on Apr 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+