For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் எடுத்தது யார் தெரியுமா? சிஎஸ்கே, பஞ்சாப் மோதிய மறக்க முடியாத ஆட்டம்

சென்னை : ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மறக்கவே முடியாத பல சரித்திரம் படைத்த போட்டிகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று, கடந்த 2008ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தை தான் பார்க்க போகிறோம்.

இந்த ஐபிஎல் போட்டியில் தான் முதல் முறையாக ஹாட்ரிக் எடுக்கப்பட்டது.
எடுத்தவர் சி எஸ் கே யின் லட்சுமிபதி பாலாஜி.முதலில் பேட்டிங் ஆடிய சி எஸ் கே டீம் 20 ஓவர்களின் ஸ்கோர் 181 / 4 ,பத்ரிநாத் 64 , கேப்டன் எம் எஸ் தோனி 60*
பஞ்சாப் டீம் ஸ்கோர் 163 / 9 , ஷான் மார்ஷ் 58 , இர்பான் பத்தான் 40

IPL classics - Who picks first ever Hat trick in IPL History

பவுலிங்
எல் பாலாஜி 5 / 34
மோர்கெல் 1 / 25
முரளிதரன் 1 / 32

ஸ்ரீநாத் 2 / 29
விக்ரம் சிங் 1 / 35
பியூஷ் சாவ்லா 1 / 36

7 வது ஓவர்
சி எஸ் கே 64 / 3
பத்ரிநாத் 20*
தோனி 0*

முதல் ஓவரிலேயே முதல் விக்கெட் எடுத்து அசத்தினார் ஸ்ரீநாத். வித்யுத் சிவராமகிருஷ்ணன் அவுட். கேட்ச் ஜெயவர்த்தனே. 8 ( 2 x 4 )
முன்னதாக இரண்டு அடுத்து அடுத்து பவுண்டரிகள் அடித்தார் வித்யுத். கவர் டிரைவ் , பாயிண்ட்.

மூன்றாவது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார், பிளெமிங் அவுட். கேட்ச் கோயல்.
1
4 வது முடிவில் ஸ்கோர் 27 / 2

5 வது ஓவரில் பத்ரிநாத் 2 பவுண்டரிகள் அடித்தார், ஸ்ரீநாத் பவுலிங்கில். மிட்விக்கெட். ஸ்ட்ராயிட் டிரைவ்.6 வது ஓவர் முதல் சிக்சரை கண்டது.டீப் மிட் விக்கெட். அடித்தது பத்ரிநாத். பவுலிங் சிங். ரெய்னா ஓவரின் முதல் பந்தை கவர் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார்.

7 வது ஓவரில் மூன்றாவது விக்கெட். ரெய்னா அவுட். கேட்ச் மார்ஷ் 26 ( 17 பந்துகள். 4 x 4 )
இந்த சாவ்லா வீசிய ஓவரில், இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ரெய்னா. மிட் விக்கெட். தர்ட்மான் .

15 வது ஓவர் முடிவில்
சி எஸ் கே டீம் ஸ்கோர்
144 / 3
பத்ரிநாத் 61* தோனி 36*

9 வது ஓவரில் 6 தோனி. லாங் ஆன். பந்து ரசிகர்கள் மத்தியில் இறங்கியது.

அடுத்து அடுத்து இரண்டு சிக்ஸர்கள், 11 வது ஓவரில் ரசிகர்களை குஷி படுத்தின. சாவ்லா போட்ட பந்துகள். பறக்க விட்டவர் எம்ஸ் தோனி. வெகு தூரத்தில் மிட் விக்கெட் பகுதியில் வேகமாக சென்று விழுந்தது முதல் சிக்ஸர். அடுத்தது நேராக அடிக்கப்பட்டது.
ரசிகர்கள் நடுவில் இருந்து திரும்பப் பெறப்பட்டது, இந்த சிக்ஸர் அடிக்கப் பட்ட பந்து.
ஸ்டேடியத்தில் ஆரவாரம் , மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

பத்தான் போட்ட டீமின் 13 வது ஓவரில் சிக்ஸர்கள் ரசிகர்களை மகிழ வைத்தன. இரண்டும் அடித்தது பத்ரிநாத். மிட் ஆன். டீப் மிட் விக்கெட்.
ரன்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இரண்டு நான்குகள் .சிங் பவுலர். அடித்தது பத்ரி நாத்.

18 வது ஓவர் விக்கெட்டை கண்டது.சிங் பவுலிங். அவுட் ஆனது பத்ரி. கேட்ச் யுவ்ராஜ் சிங். 64( 47 பந்துகள். 6 x 4 & 3 x 6 )

அந்த ஓவர் முடிவில் ஸ்கோர் 159 /4
தோனி 44*
மோர்க்கெல் 3*

ஓவர் 19. ஹோப்ஸ் பவுலர். தோனி சிக்ஸர். லாங் ஆன்.
கவர் 4. தோனி.

176 / 4
20 வது கடைசி ஓவர்.
பத்தான் போட்ட இந்த ஓவரில் 5. ஒரு ரன்கள் மட்டும்.

சி எஸ் கே ஸ்கோர் 181 / 4
மோர்க்கெல் 7*
தோனி 60*

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 182 ரன்களை விரட்டிப் பிடிக்க களம் இறங்கினர்.
கோனி வீசிய முதல் ஓவர் 12 ரன்கள் பஞ்சாப் டீம் எடுக்க உதவியது.ஹோப்ஸ் ஓவரின் மூன்றாவது பந்தை தெர்ட்மேன் பகுதிக்கு சிக்ஸர் அடித்தார்.
அடுத்த பந்து பறந்தது கவர் பவுண்டரி தாண்டி.

இரண்டாவது ஓவர் முதல் விக்கெட். ஹோப்ஸ் அவுட். கேட்ச்.தோனி. பவுலிங் மோர்க்கெல். 14 ( 7 பந்துகள் 1 x 4 & 1 x 6 ) 5 வது ஓவரில் 2 வது விக்கெட். கோனி பவுலிங். கோயல் அவுட். கேட்ச் மோர்க்கெல். 1

8 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 53 / 2
மார்ஷ் 25* சார்வான் 13*

டீமின் 9 வது ஓவர் வீசியது அமர்நாத்.
மார்ஷ் அடித்தது இரண்டு சிக்ஸர்கள். லாங் ஆன் பகுதியில் முதல் சிக்ஸர். பவுலரின் தலைக்கு மேல் அடுத்த அடி சிக்ஸர்.

11 வது ஓவர் முடிவில் மார்ஷ் 51* சார்வான் 19*

பாலாஜி போட்ட இந்த ஓவரில் லாங் ஆன் பகுதியில் ஒரு பெரிய சிக்ஸர் அடித்தவர்
மார்ஷ்

12 வது ஓவரை முரளி போட்டார். மிக பெரிய வலுவான அடி. டீப் மிட் விக்கெட் கூறைக்கு மேல் சென்று விட்டது பந்து. வேறு பந்து தேர்ந்து எடுக்க வேண்டியிருந்தது. அடித்தவர் மார்ஷ். ரசிகர்களுக்கு படு குஷி.

13 வது ஓவர் பஞ்சாப் டீம் பின்னடைவை சந்திக்க வேண்டியிருந்த்தது.
பாலாஜி மிக அருமையாக பந்து வீசினார். 2 ரன்கள் விட்டு கொடுத்தார் . உடன் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.
முதல் பந்தில் சார்வான் க்ளீன் போல்ட். நடு ஸ்டம்பு தெறித்து விழுந்தது.
20 ( 22 பந்துகள் )

5 வது பந்தில் மிக நன்றாக ஆடிக் கொண்டு இருந்த மார்ஷ் அடித்த பந்து டீ ப் ஸ்கோயர் லெக் பகுதியில் கேட்ச் பிடித்தவர் அமர்நாத்.
58 ( 38 பந்துகள். 3 x 4 & 4 x 6 )

ஸ்கோர் 97 / 4
யுவ் ராஜ் சிங் 2*
ஜெயவர்தனே 0*

அடுத்த ஓவரில் இரண்டு 4. ஒரு விக்கெட். யுவ் ராஜ் சிங் அவுட். கேட்ச் பிளெமிங். 2 ரன்கள்.
இரண்டு நான்குகளும் அடித்தவர் பத்தான்.

15 வது ஓவரில் ஒரு சிக்ஸர். முரளி பந்தில் அடித்தது ஜெயவர்த்தனே. நேர்த்தியான ஆட்டம். பந்து டீப் மிட் விக்கெட் பகுதியிலிருந்து திரும்ப பெறப் பெற்றது.

ஓவரின் கடைசி பந்தில் முரளி வீசிய தூசாரா பந்தில், ஜெயவர்த்தனே
கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பிடித்தது வித்யுத். 8 ( 1 x 6 )
18 வது ஓவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது..தோனி போட்ட பந்துகள் பறந்தன.
முதல் பந்து. 6. பவுலரின் தலைக்கு மேல். பேட்டிங் பத்தான்.

ஐந்தாவது பந்து. 6. பாயிண்ட் பகுதியில். பேட்டிங் சாவ்லா
கடைசி பந்து 4. இந்த ஓவரில் மொத்தம் ரன்கள் 19. 19 வது ஓவர் 9 ரன்கள், ஒரு சிக்ஸர் உட்பட. கடைசி 20 வது ஓவர். பவுலர் பாலாஜி. முதல் பந்து 6. பத்தான் அடித்தது.

2 வது பந்து ரன்கள் 2

3 வது பந்து பத்தான் அவுட். ரெய்னா கேட்ச்.
40 ( 18 பந்துகள். 3 x 4 & 3 x 6 )

4 வது பந்து. சாவ்லா அவுட். கேட்ச் கப்புகேந்திரா. 17 ( 15 பந்துகள். 1 x 4 & 1 x 6 )
பாலாஜி அடுத்து அடுத்து பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது பந்திலும் விக்கெட் எடுத்து சாதிப்பாரா என்பதே அங்கு கூடியிருந்த எல்லோர் மனதிலும் அந்த தருணத்தில் ஓடிய கேள்வி.

ஓடி வந்தார் பாலாஜி, அடுத்த பந்தை விக்ரம் சிங்கிற்கு போட.
ஸ்டேடியம் அதிர்ந்தது.ஆம். பாலாஜி சாதித்து சாதனை படைத்தார் , ஐ பி எல் தொடரின் முதல் ஹாட்ரிக் எடுத்து.தோனி கேட்ச் பிடிக்க விக்ரம் சிங் அவுட்.

சி எஸ் கே வீரர்கள் பாலாஜியை சுற்றிக் கொண்டு பாராட்டுதல்கள், வாழ்த்துக்களை கூறினார்கள்.அந்த ஓவரின் கடைசி பந்தை வீச மேட்ச் முடிவடைந்தது.
இந்த பாலாஜியின் அபாரமான ஓவர், மேட்ச்சின் திருப்பு முனையாக அமைந்தது.
பாலாஜிக்கு ஆட்ட நாயகர் விருது வழங்கப்பட்டது.
பஞ்சாப் டீம் ஸ்கோர் 163 / 9

கவுல் 0* ஸ்ரீநாத் 0*

சி எஸ் கே டீம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, April 3, 2024, 8:46 [IST]
Other articles published on Apr 3, 2024
English summary
IPL classics - Who picks first ever Hat trick in IPL History ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் எடுத்தது யார் தெரியுமா? சிஎஸ்கே, பஞ்சாப் மோதிய மறக்க முடியாத ஆட்டம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+