சியர்லீடர்ஸிடம் சில்மிஷம்.. ஐபிஎல் மைதானங்களில் நடந்த அட்டகாசங்கள்.. வெளிவந்த உண்மை.. தடை பின்னணி!
மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக சியர்லிடர்ஸ் என்று அழைக்கப்படும் பெண்களின் நடனம் இடம்பெறுவது இல்லை.
அதை நீங்கள் கவனித்தீர்களா ? ஏன் இப்போது அந்த பெண்களை பார்க்க முடிவது இல்லை என்று தெரியுமா?
ஒரு காலத்தில் சில ரசிகர்கள், அந்த பெண்களின் நடனத்தை பார்ப்பதற்காகவே அவர்களது கைகள் டி.வி ரிமோர்ட் நோக்கி செல்லும்.

கிடைத்த அவப் பெயர்
ஆனால், சியர்லீடர்ஸ் என்பவர்கள் தொடர்ந்து மூன்று மணி நேரம் வீரர்களையும், ரசிகர்களையும் குஷிப்படுத்துவதற்காக நடனம் ஆட கூடியவர்கள். அது எவ்வளவு பெரிய கடினமான விசயம். இதற்காக அந்த பெண்கள் கடும் பயிற்சி, உழைப்பை மேற்கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ அவப்பெயர் தான். எங்களை கலைஞர்களாக பார்க்காமல், ஆபாச பொம்மையாக சிலர் பார்ப்பதாக கெப்ரியல் என்ற சியர்லீடர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

வீரர்களின் இன்னொரு முகம்
கேப்ரியல் என்ற அந்த பெண், மும்பை அணியின் சியர்லீடராக தனது அனுபவத்தை இணையத்தில் எழுதிய போது தான் ஐ.பி.எல் போட்டிக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அதில், போட்டி முடிந்தவுடன் வீரர்கள் தங்களை பார்ட்டிக்கு அழைத்து சென்று உற்சாகமாக இருப்பார்கள் என்று கெப்ரில்லா கூறியுள்ளார். பலர் நல்ல நட்பாக பழகுவார்கள், ஆனால் சிலர் தங்களது இன்னொரு முகத்தை காட்டுவார்கள் என்றும் கெப்ரில்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துமீறிய வீரர்
ஒரு முறை ஐ.பி.எல். பார்ட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர் ஒருவர் மது போதையில் தம்மிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து பிளாக்கில் எழுதியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சியர்லீடர்ஸ் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பி.சி.சி.ஐ. தடை
தாம் இணையத்தில் அவர் செய்ததை கொஞ்சம் கூறியதற்கே பயப்பட்டு என்னை நீக்கிவிட்டார்கள் என்றும் கேப்ரிலா கூறியுள்ளார். இந்த நிலையில், சீயர்லீடர்ஸை வீரர்கள் தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் குவிந்தன. தொலைக்காட்சியில் சீயர்லீடர்ஸ் நடனமாடும் போது , அதனை பார்க்கும் இந்திய பெண்களின் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இதனையடுத்து, சியர்லீடர்ஸுக்கு பி.சி.சி.ஐ. தடை விதித்தது.


Click it and Unblock the Notifications