ஐபிஎல் கவுண்ட் டவுன் – மும்பை செய்த வினோத சாதனைகள்.. இம்முறை உடைக்க வாய்ப்பு இருக்கா?
மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்கான கவுண்டவுன் தொடங்கியது. இன்னும் சரியாக 10வது நாளில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது ஐபிஎல் தொடர். இதில் ஐபிஎல் தொடரில் படைக்கப்பட்டுள்ள சில வினோத சாதனைகளை தற்போது காணலாம்.
Recommended Video
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை உள்ளது. தற்போது 5 முறை அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.
இதற்கு அடுத்த படியாக சென்னை அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த சாதனையை சமன் செய்ய சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக வெற்றி
இதே போன்று ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகள் பெற்றுள்ள அணியில் மும்பை அணி முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை 125 போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த படியாக சிஎஸ்கே 117 போட்டிகளில் வென்றுள்ளது, ஆனால் மும்பையை விட சென்னைக்கு தான் வெற்றி விகிதம் அதிகம். சென்னை அணி 2 சீசனில் விளையாடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆட்டநாயகன் விருது
இதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா அணி 107 வெற்றிகளும், பெங்களூரு அணி 98 வெற்றிகளும் பெற்றுள்ளது. மும்பை அணி இதுவரை யாரும் செய்யாத அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது 2017ஆம்ஆண்டு சீசனில் மும்பை அணியின் வெவ்வேறு 10 வீரர்கள், ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றுள்ளனர்.

ரோகித் சர்மா
இதற்கு அடுத்த படியாக, சென்னை அணி 2018ஆம் ஆண்டு 8 முறை ஆட்டநாயகன் விருதை வென்றது. இதே போன்று ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு ஓவரிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா மட்டுமே படைத்துள்ளார். (அதாவது ஐபிஎல் வரலாற்றில் முதலாவது ஓவர் முதல் 20வது ஓவர் வரை தனியாக எடுத்து கொண்டால் அனைத்திலும் ரோகித் 200 ரன்களை தாண்டி இருப்பார்)

200 ரன்கள்
இதே போன்று 200 ரன்களுக்கு மேல் அடித்தால் மும்பை அணி இதுவரை ஒரு முறை கூட தோற்றது இல்லை. மும்பை அணி இதுவரை 12 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து 12 முறையும் எதிரணியை அடிக்க விடாமல் தடுத்துள்ளது. இதே போன்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் 6 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அதனை வெற்றிக்கரமாக Defend செய்துள்ளது. சென்னை அணி 11 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து 9 முறை வென்று 2 முறை தோல்வி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications