Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். கருப்பு பக்கங்கள்..!! விடிய விடிய பெண்களுடன் வீரர்கள் பார்டி.. முற்றுப்புள்ளி வைத்த தோனி..

மும்பை: ஐ.பி.எல். தொடர் என்றால் கிரிக்கெட், சிக்சர் என்று தானே உங்களுக்கு நினைவுக்கு வரும்.

Recommended Video

IPL 2022 Auction: Gambhir Reveals Lucknow's Strategy | OneIndia Tamil

ஆனால், ஐ.பி.எல். தொடக்கத்தில் கருப்பு பக்கங்கள் நிறைய இருந்தன. கிரிக்கெட்டை விட அப்போதைய வீரர்கள் இந்த கருப்பு பக்கங்களையே விரும்பினர்.

ஆனால், இந்த மது, மாது கலாச்சாரம் பின்னர் ஒழிக்கப்பட்டது. என்ன நடந்தது, யார் இந்த கலாச்சாரத்தை தொடக்கி வைத்தார்கள் என்று பார்ப்போம்.

ஐ.பி.எல்.பார்ட்டி

ஐ.பி.எல்.பார்ட்டி

சனிக்கிழமை இரவு நடைபெறும் பார்டிகளை பார்த்து இருப்பீர்கள். ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஐ.பி.எல். பார்ட்டி என்ற ஒரு கலாச்சாரம் இருந்தது. இதை தொடங்கி வைத்தவர் அப்போதைய ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி தான். வீரர்கள் விளையாடி களைப்பாக இருப்பார்கள், அவர்களை குஷிப்படுத்த வேண்டும் என்று தொடங்கப்பட்ட கலாச்சாரம் தான் இது.

மாடல் அழகிகள்

மாடல் அழகிகள்

ஐ.பி.எல். போட்டிகள் இரவு 11.30 மணிக்கு முடிய , வீரர்கள் 12 .15 மணிக்கு ஹோட்டல் செல்வார்கள். அப்போது தான் தொடங்கப்படும் இந்த ஐ.பி.எல். பார்ட்டி. மாடல் அழகிகளுடன் டான்ஸ், மது என பலத்தரப்பட்ட உற்சாகமான விசயங்களும் அங்கு நடைபெறும். மறுநாள் காலையில் தான் அந்த பார்ட்டி முடியும்.

உற்சாக நடனம்

உற்சாக நடனம்

இந்த பார்டியில் கலந்து கொள்வதற்காகவே ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய வீரர்கள் உண்டு. இதில் என்ன வினோதம் என்றால், தினந்தோறும் பார்ட்டி நடைபெறும். இதில் எந்த வீரர்கள் வேண்டும் என்றாலும் கலந்து கொண்டு, அங்கு இருக்கும் பெண்களுடன் உற்சாகமாக இருக்கலாம்.

தோனியின் செக்

தோனியின் செக்

லலித் மோடி, விஜய் மல்லையா போன்றோர் இந்த பார்ட்டியில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த நிலையில், இந்த பார்ட்டிக்கு தோனி, சச்சின் போன்ற வீரர்கள் ஒரு போதும் சென்றது இல்லை. வீரர்கள் விடிய விடிய பார்ட்டி செய்தால் அடுத்த போட்டிக்கு அவரால் எப்படி தயாராக முடியும். நாம் ரசிகர்களுக்காக விளையாடும் போது, சிலவற்றை தியாகம் செய்து, நமது உடலை நாம் தான் பார்க்க வேண்டும் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி ஒரு முறை காட்டமாக செய்தியாளர்களிடம் பேசிவிட்டார்.

சர்ச்சையான புகைப்படங்கள்

சர்ச்சையான புகைப்படங்கள்

இதன் பிறகு, ஐ.பி.எல் பார்ட்டி சர்ச்சை ஆனது. அங்கிருந்த பெண்களுடன் வீரர்கள் அடித்த லூட்டியின் புகைப்படங்கள் வெளிவர, வேறு வழியின்றி இந்த பார்ட்டிகளை ஐ.பி.எல். நிறுத்தியது. ஆனால் கொரோனா காலத்திற்கு முன்பு வரை இது போன்ற ஐ.பி.எல். பார்ட்டிகள் நடந்து தான் வந்தது. ஆனால் லூட்டிகள் கேமிராவுக்கு பயந்து நிறுத்தப்பட்டன.

Story first published: Saturday, January 29, 2022, 18:43 [IST]
Other articles published on Jan 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+