Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணிக்கு செல்லப்போகும் சஞ்சு சாம்சன்.. 2 வீரர்களை கேட்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் முடிவடைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த சூழலில் அடுத்த சீசன் தொடர்பான அணியை கட்டமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருக்கும் சஞ்சு சாம்சன் அந்த அணி நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சஞ்சு சாம்சன் வேற அணிக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு வயதாகிவிட்டதால், அவருக்கு பதில் மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனை தேடி வருகிறது.

Sanju samson

இதனால் சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு கொண்டுவர அந்த அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் அதற்கு சஞ்சு சாம்சன் தரவேண்டும் என்றால் தங்களுக்கு சிஎஸ்கே அவர்களிடமிருந்து இரண்டு வீரர்களை தர வேண்டும் என ராஜஸ்தான் நிர்வாகம் கூறி இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதில் அந்த வீரர் அஸ்வின் மற்றும் சிவம் துபேவாக இருக்கலாம் என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியில் நட்சத்திர வீரராக சிவம் துபே இருக்கின்றார். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக சிவம் துபே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த 2025 ஆம் ஆண்டு சீசனில் சிவம் துபே 357 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 32 ஆகும். இதே போன்று அஸ்வின் ஒன்பது போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 7 விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்தார்.

இதனால் இந்த இரண்டு வீரர்களுக்கும் பதிலாக சஞ்சு சாம்சனை பெற சிஎஸ்கே அணி முடிவு எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இடது கை ஆல்ரவுண்டர் என்றால் அது சிவம் துபேவாக மட்டுமல்ல ஜடேஜாவாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஜடேஜாவை தவிர, சிஎஸ்கே அணி நிச்சயம் சரி என்று சொல்லாது. இதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாகவும் ஜூலை மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Friday, June 27, 2025, 20:37 [IST]
Other articles published on Jun 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+