Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எம்ஜிஆர் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் ருத்துராஜ்- ரஜினி ஸ்டைலுக்கு வருவாரா? கடந்த கால வரலாறு என்ன?

மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கும் ருத்துராஜ் கெய்க்வாட், தற்போது அணி நிர்வாகத்தின் காலை வாரி விடுகிறார்.

இதனால் சென்னை அணி எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 2 முறை தோல்வியை தழுவியது.

ஆனால், சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் காரணம் அல்ல, சொதப்பும் பந்துவீச்சு தான் காரணம்.

பேட்டிங் அவசியம்

பேட்டிங் அவசியம்

ஆனால், நமக்கு ஒரு மைனஸ் இருந்தால், அந்த மைனஸை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம். அப்போதும் அந்த மைனஸ் வெளியே தெரிந்தால், நமது பிளஸான விஷயத்தை மேலும் அதிகரிப்போம் அல்லவா. அப்படி தான் சிஎஸ்கே நிலைமை. பந்துவீச்சு சொதப்பும் அளவுக்கு உள்ளது. அது சரி செய்ய வழியும் இல்லை. நிலைமை இப்படி இருக்க சென்னை அணி பேட்டிங்கின் பலத்தை அதிகரிக்க வேண்டும்.

தொடக்கம் முக்கியம்

தொடக்கம் முக்கியம்

210 ரன்கள் அடித்தும் தோல்வி என்றால் கூடுதலாக 20 ரன்களை சேர்த்து அடித்து, பந்துவீச்சாளர்களுக்கு உதவ வேண்டும். அந்த கூடுதல் 20 ரன்களை அடிக்கும் வீரர் தான் தொடர்ந்து 2 போட்டியில் சொதப்பி தள்ளுகிறார். அவர் தான் ருத்துராஜ் கெய்க்வாட். உத்தப்பாவும் , ருத்துராஜ் கெய்க்வாட்டும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினால், அவர்களுக்கு அடுத்து வருபவர்களுக்கு பாதை எளிதாகிவிடும்.

ருத்துராஜ் ஃபார்ம்

ருத்துராஜ் ஃபார்ம்

ஆனால் ருத்துராஜ் கெய்க்வாட், அப்படியே நமது புரட்சி தலைவர் எம்ஜிஆர் போலவே உள்ளார். எம்ஜிஆர் சண்டை காட்சியில் முதலில் 2 அடி வாங்கிவிட்டு தான் பின்னர் எதிரியை அடிக்க தொடங்குவார். சிஎஸ்கே வீரர் ருத்துராஜூம் அதை தான் ஃபாலோ செய்கிறார். ஐபிஎல் 2020ஆம் ஆண்டில் ருத்துராஜ் முதல் மூன்று போட்டியில் அவர் அடித்த ரன்கள் 0,5,0 ஆகும். ஆனால் இறுதியில் தொடர்ந்து 3 அரைசதம் விளாசினார்.

நெருக்கடியில் சிஎஸ்கே

நெருக்கடியில் சிஎஸ்கே

2021ஆம் ஆண்டு சீசனில் ருத்துராஜ் விளையாடிய முதல் 3 போட்டியில் 5,5, 10 ஆனால் அதன் பிறகு அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்ச் நிற தொப்பியை வென்றார். அதே போல் நடப்பு தொடரிலும் 0,1, என ரன்களை அடித்துள்ளார். இதனால் கடந்த சீசனை போல் இன்றும் சொதப்பினால் சென்னைக்கு நெருக்கடி தான் ஏற்படும். இதனால் எம்ஜிஆர் ஸ்டைல் போதும், ரஜினி ஸ்டைலுக்கு வாருங்கள் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, April 3, 2022, 19:47 [IST]
Other articles published on Apr 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+