இது டீம் இல்ல, விக்ரமன் சார் படம்.. சிஎஸ்கே வெளிநாட்டு வீரருக்கு தமிழக முறைப் படி நிச்சயத்தார்த்தம்
மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை தழுவி வருகிறது. விளையாடிய 6 போட்டியில் ஐந்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், சிஎஸ்கே வீரர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தங்களது சக அணி வீரருக்காக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
பயோ பபுளில் இருப்பதால் மன தொய்வு ஏற்பட்டு வீரர்களிள்ன ஆட்டமும் பாதித்து வருகிறது. இதற்காக, சிஎஸ்கே அணி ஒரு சிறப்பு ஏற்பாட்டை செயல்பட்டுள்ளது.

தமிழக கலாச்சாரம்
சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கான்வே. இவர், டுபிளஸிஸ்க்கு மாற்று வீரராக தேர்ந்து எடுக்கப்பட்டாலும், ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாடினார். இந்த நிலையில், கான்வே, கிம் வாட்சன் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அவர்கள் கலாச்சார முறையில் ஏற்கனவே நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.

பட்டு வேட்டி சட்டை
இந்த நிலையில், கான்வேவை பார்க்க, அவரது காதலி மும்பைக்கு வந்துள்ளார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதால், கான்வேக்கும், கிம் வாட்சனுக்கும் தமிழக முறைப்படி நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியை சிஎஸ்கே நடத்தியது. இதில் கான்வே பட்டு சட்டை. பட்டு வேட்டி அணிந்து இருந்தார்.
டக்கர் தோனி
இதே போன்று கிம் வாட்சனும், புடவை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பம்சமே தல தோனி, ஜடேஜா, பிராவோ உள்ளிட்ட வீரர்கள் வேட்டி அணிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில பங்கேற்றனர். அவர்களை தமிழக வீடுகளில் வரவேற்பது போல் பெண்கள் வரவேற்றனர்.

மறக்க மாட்டேன்
இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினர். அதன் பிறகு பெரிய கேக் ஒன்றை கான்வே வெட்டினார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கான்வே, என் வாழ்நாளில் இந்த இரவை மறக்க மாட்டேன். சிஎஸ்கே குடும்பத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார். தோனி, பிராவோ வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications