Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றும் ருத்துராஜ்.. அடுத்தடுத்து ஆட்டமிழக்கும் வீரர்கள்.. சிஎஸ்கே பரிதாபங்கள்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை 180 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது,

இதனையடுத்து சிஎஸ்கே அணி பெரிய இலக்கை துரத்தும் முனைப்புடன் களமிறங்கியது. பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த அறிமுக வீரர் வைபவ் ஆரோரா சிஎஸ்கே அணிக்கு தூங்கா இரவுகளை பரிசு அளித்தார்.

எம்ஜிஆர் ஸ்டைல்

எம்ஜிஆர் ஸ்டைல்

புரட்சி தலைவர் எம்ஜிஆர் போல் எதிரிகளிடம் முதல் 3 அடி வாங்கிவிட்டு பின்னர் ருத்துராஜ் அடிக்கும் வழக்கத்தை வைத்திருப்பாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். 2020ஆம் ஆண்டில் ருத்துராஜ் முதல் மூன்று போட்டியில் அவர் அடித்த ரன்கள் 0,5,0 ஆகும். ஆனால் இறுதியில் தொடர்ந்து 3 அரைசதம் விளாசினார்.

ருத்துராஜ் ஏமாற்றம்

ருத்துராஜ் ஏமாற்றம்

2021ஆம் ஆண்டு சீசனில் ருத்துராஜ் விளையாடிய முதல் 3 போட்டியில் 5,5, 10 ஆனால் அதன் பிறகு அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்ச் நிற தொப்பியை வென்றார். அதே போல் நடப்பு தொடரிலும் 0,1, என ரன்களை அடித்திருந்த ருத்துராஜ் இன்றைய ஆட்டத்திலும் 1 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். கடந்த சீசனில் அவர் விளையாடிய 4வது இன்னிங்சில் அரைசதம் அடித்தார்.

2 டக்அவுட்

2 டக்அவுட்

இதனால் ருத்துராஜ் அடுத்த போட்டியில் தான் விளையாடுவார் போல என ரசிகர்கள் மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர். இதே போன்று பஞ்சாப் அணியின் அறிமுக வீரர் வைபல் அரோரா, அதிரடியாக விளையாடிய உத்தப்பாவை 13 ரன்களில் ஆட்டமிழக்க வைத்தார். இதனையடுத்து கேப்டன் ஜடேஜாவும் வைபவ் பந்துவீச்சில் டக் அவுட்ஆனார்.

சிஎஸ்கே 36-5

சிஎஸ்கே 36-5

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலியும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் போல்ட் ஆனார். அணியை சரிவிலிருந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடுவும் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Sunday, April 3, 2022, 22:55 [IST]
Other articles published on Apr 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+