Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL CSK vs RR இன்று மோதல்.. முதல் ரவுண்டு தோல்விக்கு பதிலடி தருவாரா தோனி..CSK க்கு இருக்கும் சிக்கல்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் ஜெய்ப்பூரில் தீவிர பயிற்சி மெற்கொண்டு வருகின்றனர்.

சிஸ்கே அணியை பொறுத்தவரை ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகின்றனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை , கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

IPL CSK vs RR Match today Preview in tamil - Will MS Dhoni Pays back

இதனால் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய உத்வேகத்துடன் ராஜஸ்தான் அணி வீரர்கள் உள்ளனர். நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர், தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது , அந்த அணிக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ராஜஸ்தான் 5 போட்டிகளில் வென்றுள்ளது.

சிஎஸ்கே ஒரு ஆட்டத்தில் மட்டும் தான் வென்றுள்ளது. கடைசியாக மோதிய போது தோனியின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே வெற்றி பக்கம் வரை தோற்றது. இதனால் பதிலடி தரும் உத்வேகத்துடன் சிஎஸ்கே உள்ளது. சிஎஸ்கே அணியில் உள்ள ருதுராஜ்க்கு, ஆர்ஆர் வீரர்கள் சந்திப் சர்மாவும், டிரெண்ட் பௌல்டும் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறார்.

இது சிஎஸ்கேக்கு பின்னடைவை தரலாம். ஆடுகளமும் தோய்வாக இருப்பதால் சிஎஸ்கே, பிளேயிங் லெவனை அதுக்கு தகுந்தால் போல் மாற்றுமா என்ற குழப்பமும் எழுந்துள்ளது. ராஜஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஹானே, தன்னுடைய ஜெய்ப்பூர் கோட்டைக்கு திரும்புகிறார். மொத்தத்தில் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Thursday, April 27, 2023, 0:00 [IST]
Other articles published on Apr 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+