Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK க்கு மீண்டும் வருகிறதா தடை? பிசிசிஐயின் எதிரியுடன் கைக்கோர்க்கும் ஸ்ரீனிநாசன்? கோபத்தில் ஜெய்ஷா

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருந்த சிஎஸ்கே ஏற்கனவே ஒரு முறை சூதாட்டப் புகாரில் சிக்கி தடை வாங்கி இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகி சீனிவாசன் பிசிசிஐயின் எதிரியுடன் கைக்கோர்த்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிசிசிஐ பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் வாழ்நாள் தடை விதிக்கப்படும். இப்படித்தான் பிசிசிஐக்கு எதிராக உலக கோப்பையை வென்று தந்த கபில்தேவ் ஐசிஎல் என்ற ஒரு கிரிக்கெட் தொடரை தொடங்கினார்.

IPL - Danger awaits for CSK as N srinivasan joining hands with Lalit Modi

இதில் பங்கேற்ற பல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டு பிறகு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் லலித் மோடி ஐபிஎல் என்ற ஒரு கிரிக்கெட் தொடரை தொடங்கி பெரும் லாபத்தை பிசிசிஐக்கு கொடுத்தார். ஆனால் பிசிசியில் தாம் தான் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என அவர் நகர்த்திய காய்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் சூதாட்டப் புகார், பண மோசடி புகார் ஆகியவற்றில் சிக்கி தற்போது லலித் மோடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். லலித் மோடி பிசிசிஐக்கு திரும்ப முடியாத படி பல்வேறு வழக்குகள் அவர் மீது இருக்கிறது. இந்த நிலையில் தான் இங்கிலாந்தில் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக புதிய ஒரு தனியார் தொடரை நடத்த லலித் மோடி ஆர்வம் காட்டி வருகிறார்.

இங்கிலாந்தில் நடத்தப்படும் The Hundred என்ற தொடரை முற்றிலுமாக மாற்றி ஐபிஎல் க்கு போட்டியாக மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் ஐபிஎல் அணிகளை வரவழைத்து இங்கே உள்ள அணிகளை வாங்கி போட்டியை நடத்த உள்ளார். இதற்கான பணத்தை லலித் மோடி முதலீடு செய்யப் போகிறார். இதில் டிவிஸ்டே தற்போது லலித் மோடியுடன் இந்த கூட்டணியில் சிஎஸ்கே அணியின் நிறுவனர் சீனிவாசன் கைகோர்க்க போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாக இருக்கிறது.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இதுதான் தற்போது ஜெய்ஷா கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது இங்கிலாந்திலும் ஐபிஎல் அணிகள் மற்ற அணிகளில் வாங்க இருப்பது நல்ல விஷயமாக கருதப்பட்டாலும் அது பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

Story first published: Tuesday, February 13, 2024, 14:00 [IST]
Other articles published on Feb 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+