Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லியை பழி தீர்க்க காத்திருக்கும் ஸ்ரேயாஸ்.. கேகேஆர்-ஐ வச்சு செய்ய போகும் குல்தீப்.. என்ன காரணம்?

மும்பை: ஐபிஎல் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் இன்று மோதுகிறது. இந்தப் போட்டி மும்பை பிராபவுன் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

கொல்கத்தா அணி விளையாடிய 4 போட்டியில் மூன்றில் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி விளையாடிய மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

இந்தப் போட்டியை வெறும் 2 வீரர்களுக்காக மட்டும் தான் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

அதற்கு காரணம், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு பேரும் தங்கள் முன்னாள் அணியுடன் மோதுகின்றனர். கேப்டன் பதவியை கொடுக்காமல் டெல்லி அணியை விட்டு ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றிவிடப்பட்டார். இதனால் டெல்லி அணியை சந்திக்கும் போது, என்னை விட்டது தவறு என்பதை நிரூபிக்க ஸ்ரேயாஸ் நிச்சயம் முயற்சி செய்வார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இதே போன்று கேகேஆர் அணியில் தம்மை வாட்டர் பாயாக மட்டும் நடத்தினர் என்று ஏற்கனவே மனக்குறையில் உள்ள குல்தீப் யாதவ், தற்போது தனது முன்னாள் அணியை பழிவாங்க அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது, இரு அணிகளும் இதுவரை நடைபெற்ற 28 போட்டியில் கொல்கத்தா 16 போட்டியிலும் , டெல்லி அணி 12 போட்டியிலும் வென்றுள்ளது.

கடைசி 9 போட்டி

கடைசி 9 போட்டி

கடைசியாக நடைபெற்ற 9 போட்டியில் டெல்லி 5 போட்டியிலும், கொல்கத்தா 4 போட்டியிலும் வென்றுள்ளது. டெல்லி அணி பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கொத்து கொத்தாக ஆட்டமிழந்து வருகின்றனர். இதனால் வார்னர், ரிஷப் பண்ட், பொவேல் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே அணியில் வெற்றி பெற முடியும்.

கேகேஆர் பேட்டிங்

கேகேஆர் பேட்டிங்

கொல்கத்தா அணியும் கடந்த முறை பேட்டிங்கில் தடுமாறியது. ஒரு ஆட்டத்தில் ரஸலும் இன்னொரு ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தான் காப்பாற்றினர் மேலும் தொடக்க வீரராக களமிறங்கும் ரஹோனேவும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதனால் பாபா இந்தரஜித், ஆரோன் பிஞ்ச் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

Story first published: Sunday, April 10, 2022, 10:09 [IST]
Other articles published on Apr 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+