Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூரை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றி

பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை அபாரமாக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த்து டெக்கான் சார்ஜர்ஸ்.

இந்தப் போட்டியில் வென்றால்தான் அரை இறுதி குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் நேற்றைய போட்டியை சந்தித்தது டெக்கான்.

டாஸ் வென்ற கேப்டன் கில்கிறைஸ்ட், டெக்கான் முதலில் பீல்டிங் செய்யும் என அறிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்ய ஆரம்பித்த பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கல்லிஸ் சிறப்பான தொடக்கத்தை தந்தார்.

44 பந்துகளில் 68 ரன்களைக் குவித்த கல்லிஸ் மார்ஷ் பந்தில் வீழந்தார். பின்னர் வந்தவர்களில் டிராவிட் 26 ரன்களுடன் செல்ல, உத்தப்பா 2 ரன்களில் ஏமாற்றினார். டெய்லர் 1 ரன்னில் வீழ்ந்தார்.

இருப்பினும் விராத் கோலி அபாரமாக ஆடி 58 ரன்களைக் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்த்து பெஙகளூர்.

185 என்ற வெற்றி இலக்கைத் துரத்த ஆரம்பித்த்து டெக்கான் சார்ஜர்ஸ். தொடக்க ஆட்டக்காரர்களில் கில்கிறைஸ்ட் அதிரடியாக ஆடி 32 ரன்களைக் குவித்தார். மிஸ்ரா வெறும் 9 ரன்களில் நடையைக் கட்ட, இளம் வீரர் திருமலாசெட்டி சுமன் அட்டகாசமான ஆட்டத்தைக் காட்டினார்.

அவரும் சைமண்ட்ஸும் சேர்ந்து நடத்திய தீபாவளியால் டெக்கான் ரசிகர்கள் குஷியடைந்தனர். இந்த ஜோடியை கடைசி வரை பெங்களூர் பந்து வீச்சாளர்களால் பிரிக்கவே முடியவில்லை.

மிகத் துல்லியமாக பந்துகளைக் கணித்து அசத்தலாக ஆடினர் இருவரும். குறிப்பாக சைமண்ட்ஸ் கடைசி நேரத்தில் பிரமாதமாக ஆடி ரன்களைக் குவித்தார். மறுபக்கம் சுமன் தொடக்கத்திலிருந்தே அழகாக ஆடினார்.

சைமண்ட்ஸ் 24 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார். சுமன் 57 பந்துகளில் 78 ரன்களைக் குவித்தார். சுமனின் அற்புதமான ஆட்டமே டெக்கான் அணி நேற்றைய போட்டியில் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்த்து.

இறுதியில், கடைசி ஓவரில் நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில், 3 விக்கெட்களை மட்டும் இழந்து டெக்கான் அணி 186 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக சுமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிக்கான போட்டியில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது டெக்கான் சார்ஜர்ஸ்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+