For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த வீரர்.. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு விளையாட விருப்பம்

டெல்லி : டிஎன்பிஎல் லீக் தொடர் பாணியில் டெல்லியில் பிரீமியர் லீக் தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் 23 வயதான டெல்லியை சேர்ந்த பிரியன்ஸ் ஆர்யா என்ற வீரர் தெற்கு டெல்லி அணிக்காக விளையாடினார். இதில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 பிரியான்ஸ் ஆர்யா சாதனை படைத்தார்.

மறுபுறம் ஆயுஷ் பதோனி அபாரமாக விளையாட இந்த ஜோடி 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. இதன் மூலம் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார் அணி 308 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் டெல்லியின் யுவராஜ் சிங் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட பிரியான்ஷ் ஆர்யா ஐபிஎல் தொடரில் தாம் ஆர்சிபி அணிக்காக விளையாட ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

delhi premier league priyanash arya

இது குறித்து பேசிய அவர் எனக்கு விராட் கோலியை மிகவும் பிடிக்கும். அவருக்காக நான் ஆர்சிபி அணியில் விளையாட ஆசைப்படுகிறேன். நான் அந்த ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்தபோது. ஆயுஷ் பதோனி, என்னிடம் வந்து ஆறு சிக்ஸர்கள் அடிக்க கூறி நம்பிக்கை அளித்தார் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யா 40 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 50 பந்துகளில் 120 ரன்கள் அவர் விளாசினார் இதில் 10 பவுண்டரி அடங்கும். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 240 என்று அளவில் இருந்தது. மறுமுனையில் விளையாடிய கேப்டன் ஆயுஸ் பதோனி 55 பந்துகளில் 165 ரன்கள் குவித்தார்.

இதில் எட்டு பவுண்டரிகளும் பத்தொன்பது சிக்சர்களும் அடங்கும். ஆயுஸ் பதோனி அதிரடியாக விளையாடியதால் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸர் அடித்த சாதனை பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. எனினும் இந்த தொடரில் ஒவ்வொரு இளம் வீரர்களும் அபாரமாக விளையாடி வருகின்றனர். இதனால் ஐபிஎல் அணிகள் இந்த வீரர்கள் எல்லாம் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

வரும் மெகா ஏலத்தில் பிரியான்ஸ் ஆர்யா பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியாஸ் ஆர்யா யுவராஜ் சிங் போல் இடது கை வீரராக நின்று அவரைப் போலவே விளையாடுகிறார். ஆனால் அவருக்கு யுவராஜ்சிங்கை விட விராட் கோலி தான் பிடிக்கும் என கூறி இருக்கிறார். இதனால் ஆர்சிபி அணி இவரை எடுக்குமா இல்லை வழக்கம் போல் மெகா ஏலத்தில் மிக்சர் சாப்பிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி தங்களுடைய பிளேயிங் லெவனில் அடுத்த சுரேஷ் ரெய்னாவை தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு இடதுகை பேட்ஸ்மேன் நடு வரிசையில் இருந்தால் அது அணிக்கு சாதகமான ஒரு நிலையை கொடுக்கும் இதனால் ரியாஸ் ஆர்யாவும் சிஎஸ்கே ரேடாரில் சிக்கி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி ஒருவேளை திலக் வர்மாவை தேர்வு செய்யவில்லை என்றால் சிஎஸ்கே அவரை தேர்ந்தெடுக்க கடுமையாக முயற்சி செய்யும். அப்படி திலக் வர்மா சிஎஸ்கேவுக்கு கிடைக்கவில்லை என்றால் பிரியாஸ் ஆர்யா போன்ற வீரர்களை குறி வைக்கலாம்.

Story first published: Tuesday, September 3, 2024, 14:11 [IST]
Other articles published on Sep 3, 2024
English summary
IPL - Delhi Yuvraj singh Priyanash Arya who hits 6 sixers in an over says He loves to play for RCB ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த வீரர்.. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு விளையாட விருப்பம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+