Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.. டி20 இறுதி ஓவரில் உலக சாதனை.. சான்சே இல்ல ! தல டக்கர் பேட்டிங்

மும்பை: சர்வதேச கிரிக்கெட் உலகில் தாம் ஒரு பினிஷிங் கிங் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் தல தோனி. தோனிக்கு தற்போது வயது 40 ஆகிவிட்டது.

40 வயதில் தோனியால் என்ன செய்ய முடியம். அவருக்கு பேட்டிங் போய்விட்டது என்று ஏளனம் பேசியவர்களுக்கு, தனது பேட்டிங் மூலம் தக்க பதிலடி தந்துள்ளார்

மும்பைக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் தோனி இன்று களமிறங்கினார் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இதுவே பழைய தோனி என்றால், அது அல்வா சாப்பிடுவது போல் அவருக்கு இருந்திருக்கும்.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகிவிட்டது. ஐபிஎல் தவிர வேறு எந்த போட்டியிலும் விளையாடுவது இல்லை. 2021 ஐபிஎல் சீசனில் அவர் அடித்த ஒட்டுமொத்த ரன்களே 114 தான். அதில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 18 ரன்கள். இருந்தும் தோனியின் பேட்டிங் உதவி இல்லாமல் சிஎஸ்கே கோப்பையை வென்றுவிட்டது. இதனால் தோனி இனி பேட்டிங்கிற்கு தேவையில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.

பழைய தோனி

பழைய தோனி

ஆனால் தோனி இதனை காதில் வாங்கவில்லை. வழக்கம் போல் பயிற்சியை தொடர்ந்தார். பயிற்சியில் கவனம் செலுத்தினாலே நமக்கு தேவையான ரிசல்ட் கிடைக்கும் என்பது தோனியின் கொள்கை. அதனை நம்பிய தோனி, இந்த சீசனில் கேப்டன் பதவியை துறந்துவிட்டு, பழைய தோனியாக ஐபிஎல் நடப்பு சீசனில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார்.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

எனினும் அவரால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தரவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தில் விக்கெட், 2வது பந்தில் சிங்கிள் என மாற, வெற்றிக்கு 4 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தோனி வழக்கம் போல் கூலாக 6,4,2,4 என 4 பந்திலேயே சென்னைக்கு த்ரில் வெற்றி பெற்று தந்தார்.

தோனி சாதனை

தோனி சாதனை

இதன் மூலம் டி20 போட்டியில் 20 வது ஓவரில் உலகத்திலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளார் தோனி. 20வது ஓவரில் மட்டும் தோனி 121 பந்துகளை பிடித்து 323 ரன்களை விளாசியுள்ளார். இதில் 26 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடங்கும், இதில் ஸ்ட்ரைக் ரேட் 266.94. இப்படி ஒரு சாதனையை டிவில்லியர்ஸ், கெயில் கூட படைத்தது இல்லை.

Recommended Video

MI vs CSK: Vintage Dhoni helps CSK beat MI by 3 wickets in last-ball thriller | Oneindia Tamil
2010ஆம் ஆண்டில் தோனி

2010ஆம் ஆண்டில் தோனி

தோனியின் இந்த ஆட்டத்தை பார்க்கும் போது 2010ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தான் ரசிகர்களுக்கு நினைவு வந்தது. பஞ்சாப்க்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் தான் அரையிறுதி வாய்ப்பு. ஆனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இர்பான் பதான் வீசிய கடைசி ஓவரில் தோனி 4,2,6,6, என விளாசி த்ரில் வெற்றியை பெற்று தந்தார். அப்போது அவருக்கு வயது 28. ஆனால் சரியாக 12 ஆண்டுகள் கழித்தும் மீண்டும் அதே போன்ற ஒரு சாதனையை படைத்து அசத்தியுள்ளார் தோனி. அந்த சீசனில் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது தோனி உங்களுக்கு உண்மையிலே வயசு ஆகல என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Story first published: Friday, April 22, 2022, 1:20 [IST]
Other articles published on Apr 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+