Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவை நம்பி ஏமாந்த தோனி.. அந்த ஒரு பந்தால் முடிவே மாறிடுச்சி.. தப்பு பண்ணிட்டீங்களே தல

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேப்டன் தோனி செய்த ஒரு தவறால் சிஎஸ்கே அணி தோற்று விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தோனி 17 பந்தில் 32 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும்.

வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற ஆட்டத்தை வெற்றியின் அருகே வரை தோனி கொண்டு வந்து நிறுத்தினார். எனினும் கடைசி ஓவரில் அவர் எடுத்த தவறான முடிவு தான் மூன்று ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோற்றுவதற்கு காரணமான அமைந்துள்ளது.

csk dhoni and jadeja

இதுவே அந்த முடிவை தோனி சரியாக எடுத்து இருந்தால் இந்நேரம் சிஎஸ்கே ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும். சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 21 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதனை சந்திப் சர்மா முதல் பந்திலேயே இரண்டு wide களை சந்திப் ஷர்மா வீசினார். இதை அடுத்து அதிகாரப்பூர்வமான முதல் பந்து யாக்கர் லென்த்தில் வீச அதில் தோனியால் ரன் எடுக்க முடியவில்லை.

எனினும் அடுத்த இரண்டு பந்துகளில் தோனி தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் வெற்றிக்கு மூன்று பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 19.4 வது ஓவரில் தான் தோனி ஒரு தவறை செய்தார். பொதுவாக தோனிக்கு எதிரே ஒரு பந்துவீச்சாளர் நின்று கொண்டிருந்தால் அவர் ரன் ஓடாமல் தானே அந்த போட்டியை முடித்து இருப்பார்.

csk

ஆனால் எதிரே ஜடேஜா இருந்த தைரியத்தில் தோனி ரன் ஓடிவிட்டார். இதனால் அடுத்த பந்தை ஜடேஜா பவுண்டரி அடிக்காமல் சிங்கிள் ஓடிவிட்டார். இதனால் ஒரு பந்துக்கு 5 ரன்கள் என்ற நிலை ஏற்பட தோனியால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த நிலையில் தோனி தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்து சிறப்பான ஃபார்மில் இருந்த நிலையில் ஜடேஜாவை நம்பி சிங்கிள் ஓடாமல் அவரே பேட்டிங் செய்திருந்தால் அடுத்த இரண்டு பந்தையும் தோனியை பிடிக்க நேர்ந்திருக்கும். இதில் அவர் எப்படியாவது பவுண்டரியை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார். ஜடேஜாவை நம்பியதால் சென்னை தோற்றுவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Story first published: Thursday, April 13, 2023, 5:28 [IST]
Other articles published on Apr 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+