For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லக்னோ தோல்விக்கு 5 முக்கிய காரணம் என்ன? கடைசியில் சொதப்பிய கம்பீர் படை.. ராகுல் கொடுத்த ஷாக்

கொல்கத்தா: ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வியை தழுவியது.

இதன் மூலம் குவாலிபையர் 2 போட்டிக்கு ஆர்சிபி தகுதி பெற, லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 207 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் லக்னோ செய்த தவறுகளை தற்போது காணலாம்.

டாஸ் சொதப்பல்

டாஸ் சொதப்பல்

இந்த தொடரை பொறுத்தவரை லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்த போது தான் அதிக வெற்றிகளை பெற்றது. செஸிங் செய்யும் போது பல போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. அப்படி இருக்க, லக்னோ அணியின் பலம் முதலில் பேட்டிங் செய்வதாக இருக்கும் போது, அந்த அணி ஏன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது முதல் தவறாக பார்க்கப்படுகிறது.

எதிர்பாராத ஆட்டம்

எதிர்பாராத ஆட்டம்

முதல் ஓவரில் டுபிளஸில், சொற்ப ரன்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை ஆட்டமிழக்க செய்த லக்னோ அணி, மற்ற வீரர்களுக்கு சரியான யுத்தியை வகுக்காமல் விட்டுவிட்டது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்கள் பாடத் திட்டத்தில் இருந்து வெளியே கேள்வி கேட்கப்பட்டால் எப்படி திணறுவார்களோ, அப்படி ரஜத் பட்டிடார் அடித்து துவம்சம் செய்து விட்டார்.

வீணாக்கிய பந்துகள்

வீணாக்கிய பந்துகள்

208 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது தொடக்கம் மிகவும் முக்கியம். ஆனால் குயின்டன் டி காக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் 208 ரன்கள் என்ற ஸ்கோரை அடிக்கும் போது பந்தை வீணாக்க கூடாது. குறைந்தபட்சம் சிங்கிள்ஸ், டபுள்ஸ் என்று ஓடி எடுத்திருக்கலாம். ஆனால் லக்னோ அணி 43 பந்துகளை வீணாக்கி அதில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. லக்னோ அணியின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

6 பவுண்டரி

6 பவுண்டரி

இதே போன்று ஆர்சிபி அணி 20 ஓவரில் 21 பவுண்டரிகளை விளாசியத. ஆனால் லக்னோ அணி மொத்தமே 6 பவுண்டரிகளை மட்டும் தான் அடித்தது. கூடுதலாக ஒரு 5 பவுண்டரிகளை அடித்து இருந்தால் கூட ஆர்சிபி அணியின் இலக்கை துரத்தி இருக்க முடியும், மேலும் கேப்டன் கேஎல் ராகுல் தோனியை போல் கடைசி நேரத்தில் பெரிய ஷாட்களை ஆடினார். ஆனால் தோனி கடைசி வரை நின்று வெற்றியை தேடி தருவார். ஆனால் ராகுல் முக்கிய கட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றினார்.

Story first published: Thursday, May 26, 2022, 10:49 [IST]
Other articles published on May 26, 2022
English summary
IPL Eliminator – 5 Reason for Lucknow Loss against RCB லக்னோ தோல்விக்கு 5 முக்கிய காரணம் என்ன? கடைசியில் சொதப்பிய கம்பீர் படை.. ராகுல் கொடுத்த ஷாக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+