Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்விங் ஆன பந்து.. சிதறிய ஆர்சிபி.. 49 ரன் கண்டத்தை தாண்டியது.. அதே போல் நடந்ததால் அச்சம்

பெங்களூரு: ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபியும், கொல்கத்தா அணியும் மோதின ஆட்டம் ரோலர் கோஸ்டர் போல் மாறிவிட்டது.

மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீசியது.

பெங்களூரு அணி வீரர்களின் அபார பந்துவீச்சால் கொல்கத்தா அணி 128 ரன்களுக்கு சுருண்டது. போட்டி உப்பு சப்பில்லாமல் போய்விடும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

ஆனால் போட்டி இன்னும் முடியவில்லை என்று நினைத்த கேகேஆர் வேகப்பந்துவீச்சாளர்கள் தக்க பதிலடி தந்தனர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரை கண்டதுமே ஆர்சிபி வீரர்கள் பதறி போக, ஆட்டத்தின் 3வது பந்திலேயே ஆர்சிபியின் தொடக்க வீரர் அனுஜ் ராவத் டக் அவுட்டாகி வெளியேறினார்.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

இதன் பின்னர் அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஆர்சிபி கேப்டன் டுபிளஸி விக்கெட்டை டிம் செளதி கழற்றினார். இதனால் பெரும் நெருக்கடி ஆர்சிபி அணிக்கு ஏற்பட்டது. இதனால் விராட் கோலி காப்பாற்றுவார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விராட் கோலியின் வழக்கமான குறையை வைத்தே காலி செய்தார் உமேஷ் யாதவ்.

அதே மாதிரி

அதே மாதிரி

விராட் கோலி கவுண்டர் அட்டாக் செய்ய முயன்றதை அறிந்த உமேஷ் யாதவ், அவரின் குறையாக 6வது லைன் ஸ்டம்பில் பந்துவீச, அதனை அடிக்க முயன்று விராட் கோலி ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்த முறையை கண்டு, கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் விரக்தி அடைந்தனர்.

49 வரலாறு

49 வரலாறு

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி ஒரு சோகமான சாதனையை படைத்தது. அதாவது 49 ரன்களில் அந்த அணி சுருண்டது. அதற்கும், இதற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் விளையாடிய கொல்கத்தா ஆல் அவுட் ஆனது. திரும்ப பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி 49 ரன்களில் சுருண்டது. தற்போது அதே போல் கொல்கத்தா ஆல் அவுட் ஆக, ஆர்சிபி அணியும் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அந்த கண்டத்தை தாண்டியது.

Story first published: Wednesday, March 30, 2022, 22:44 [IST]
Other articles published on Mar 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+