Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் அபிரிதி ஆட முடியாமப் போச்சே... ரசிகர்கள் ஏக்கம்!

டெல்லி: ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரரான ஷாஹித் அப்ரிதியை அதிகம் மிஸ் பண்ணுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எந்தெந்த வீரர்களை அதிகம் மிஸ் பண்ணுகிறீர்கள் என்று ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 27.20 சதவீதம் பேர் அதாவது 5 ஆயிரத்து 355 பேர் பாகிஸ்தானின் அதிரடி வீரரான ஷாஹித் அப்ரிதியை மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளனர்.

IPL fans miss Shahid Afridi

அடுத்ததாக இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனை மிஸ் பண்ணுவதாக 23.45 சதவீதம்(4,613) பேரும், இலங்கை வீரர் குமார் சங்ககாராவை மிஸ் பண்ணுவதாக 16.62 சதவீதம்(3,272) பேரும் தெரிவித்துள்ளனர்.

ஷாஹித் அப்ரிதி அதிரடி ஆட்டக்காரர் ஆவார். இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அப்ரிதியால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்டபோது டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியவர் அப்ரிதி.

Story first published: Friday, May 1, 2015, 17:00 [IST]
Other articles published on May 1, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+