For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

35 வயதுக்கு மேல் இருந்தால் தான் என்ட்ரி - சிஎஸ்கே வை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!!

பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது நடைபெறும் ஏலத்தை வைத்து தான் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணிகளை பலப்படுத்த முடியும்.

இதனால் மற்ற வீரர்கள் எல்லாம் இளம் வரர்களை குறிவைத்து தொடர்ந்து பணத்தை வாரி இறைத்து வருகின்றனர்.

பின்வாங்கும் சிஎஸ்கே

பின்வாங்கும் சிஎஸ்கே

ஆனால் சென்னை அணி இளம் வீரர்களை தொடர்ந்து குறிவைக்காமல், சீனியர்களையே குறிவைத்து வருகிறது. அப்படி தப்பி தவறி இளம் வீரர்களை குறிவைத்து எடுத்தாலும் 5 கோடியை ஏலத் தொகை தாண்டிவிட்டால் சென்னை அணி அப்படியே பின்வாங்கி விடுகிறது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

சரி, தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வினை எல்லாம் சென்னை அணி எளிதாக எடுத்து இருக்கலாம். ஆனால் பணத்தை செலவு செய்யாமல் இருவரையும் சென்னை அணி எடுக்கவில்லை. தற்போது சிஎஸ்கே எடுத்துள்ள உத்தப்பாவுக்கு 36 வயது, பிராவோக்கு 38 வயது. இதனால் சென்னை அணியில் விளையாட வேண்டும் என்றால் 35 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் மீம்ஸ்

நெட்டிசன்கள் மீம்ஸ்

மேலும், சென்னை அணி அடிப்படை விலையில் வீரர்களை வாங்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. வார்னர், டுபிளஸி ஆகியோரை கொஞ்சம் கூடுதல் விலை செலவு செய்து இருந்தால் கிடைத்து இருக்கும்.இதனால் சென்னை அணி நிர்வாகிகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

என்ன பிளான்

என்ன பிளான்

சென்னை அணி நிர்வாகிகள் பாயிண்ட் வரட்டும் பொறு தம்பி, மிச்சர் சாப்பிடும் சினிமா காட்சிகளை வைத்து சிஎஸ்கே வை மீம்ஸ் போட்டு ரசிகர்கள் வெளுத்து வாங்குகின்றனர். சென்னை அணியின் யுத்தி என்ன வென்றே தெரியவில்லையே, தல என்ன நினைத்து பிளான் போடுகிறார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Saturday, February 12, 2022, 18:59 [IST]
Other articles published on Feb 12, 2022
English summary
IPL Fans trolled csk for their performance in mega auction35 வயதுக்கு மேல் இருந்தால் தான் என்ட்ரி - சிஎஸ்கே வை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+