Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி செய்வதா.. ஐபிஎல் ஃபைனலில் ஏமாற்றம்.. ரன்வீருக்கு தெரிந்ததுகூட அவருக்கு தெரியலயே

அகமதாபாத்: ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த காரியத்தால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

ஐபிஎல் 15வது சீசன் இறுதிப்போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஐபிஎல் நிறைவு விழா பிரமாண்டமாக தொடங்கியது.

ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சி

ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சி

மைதானத்தில் சுமார் 1,20,000 பார்வையாளர்கள் சூழ்ந்திருக்க, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நடனத்தால் அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தார். 83 திரைப்பட பாடல் முதல், கொடியை ஏந்திக்கொண்டு மைதானத்தில் ஓடியது முதல் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ரசிகர்கள் புத்துணர்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

ரஹ்மான் மீது கொந்தளிப்பு

ரஹ்மான் மீது கொந்தளிப்பு

இந்நிலையில் இந்த கலைநிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்தந்த மாநிலங்களின் நடனங்களை கலைஞர்கள் ஆடினர். எனினும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை கூட தமிழில் பாடவில்லை. தமிழில் வெளியாகி ஹிட்டான பல்வேறு பாடல்களையும் ஹிந்தி மொழியில் தான் அவர் பாடியிருந்தார்.

ரன்வீர் கூட செய்தாரே

ரன்வீர் கூட செய்தாரே

பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், தமிழில் மாஸ்டர் திரைப்படம், தெலுங்கில் நாட்டு நாட்டு, கன்னடத்தில் வந்த கேஜிஎஃப் என மற்ற மொழிகளின் பாடல்களில் நடனமாடி கலக்கினார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் குறைந்தது ஒரு பாடலை கூட தமிழில் பாடாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

ரஹ்மானின் விளக்கம்

ரஹ்மானின் விளக்கம்

இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அவரும் இந்தி மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளனர். இதற்கு ரஹ்மான் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, May 29, 2022, 20:08 [IST]
Other articles published on May 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+