Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பேருக்கு மட்டுமே முக்கியத்துவம்.. ஹர்திக் பாண்ட்யா பக்கா ஸ்கெட்ச்.. ராஜஸ்தானை சுருட்டிய குஜராத்!!

அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக குஜராத் அணியின் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித் கான் போட்ட திட்டம் பக்காவாக சக்ஸஸ் ஆகியுள்ளது.

Recommended Video

Gujarat Titans கேப்டன் Hardik Pandya செய்த தரமான் சம்பவம் | #Cricket

குஜராத் vs ராஜஸ்தான் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சஞ்சுவின் தவறான முடிவு

சஞ்சுவின் தவறான முடிவு

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியால் ரன்களை அடிக்க முடியாது என ஏற்கனவே வல்லுநர்கள் கூறியிருந்தனர். 2வது பேட்டிங் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் எனக்கூறுகின்றனர். ஆனால் சஞ்சு சாம்சன் ரிஸ்க் எடுக்கும் வகையில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ஏமாற்றம்

ராஜஸ்தான் ஏமாற்றம்

இதற்கேற்றார் போன்றே சஞ்சு சாம்சன் நல்ல அடி வாங்கினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி அதிரடி காட்டினர். குஜராத் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஆனால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித் கான் ஆகியோர் அட்டகாசமான கம்பேக் கொடுத்தனர்.

பொறுப்பான கேப்டன்

பொறுப்பான கேப்டன்

தொடர்ந்து பவுன்சர்களாக வீசி வந்த ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு கொண்டு சென்றார். இதனால் ஜாஸ் பட்லர் 39 ரன்களுக்கும், கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களுக்கும், சிம்ரான் ஹெட்மெயர் 11 ரன்களுக்கும் என ஹர்திக் பாண்ட்யா விக்கெட் எடுத்தார். இதே போல துணைக்கேப்டன் ரஷித் கானும் பொறுப்பை சுமந்தார். அவரின் ஓவரில் தேவ்தத் பட்டிக்கல் அவுட்டானார். எனினும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை.

மொத்த ரன்கள் என்ன

மொத்த ரன்கள் என்ன

மொத்தமாக 4 ஓவர்களை வீசிய ஹர்திக் பாண்ட்யா 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போல ரஷித் கான் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மற்ற பவுலர்களில் ஷமியை தவிர முழுவதுமாக 4 ஓவர்களை வீசவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

Story first published: Sunday, May 29, 2022, 22:15 [IST]
Other articles published on May 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+