
அதிர்ந்த ரசிகர்கள்
இந்நிலையில் இந்த முடிவை கேட்டு களத்தில் இருந்த ரவி சாஸ்திரி உட்பட ரசிகர்கள் அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் நிலைமை தான் அதற்கு காரணம். இங்கு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணி தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
Recommended Video

பிட்ச் நிலைமை
இங்கு முதல் இன்னிங்ஸில் பவுலர்களுக்கு சாதகமாக இருப்பதால் பிட்ச்-ல் பந்தின் திசையை கணிப்பது கடினமாக இருப்பதாக தெரிகிறது. எனினும் பேட்ஸ்மேன் முதல் சில பந்துகள் நிதானமாக கவனித்து ஆடினால் பின்னர் அதிரடி காட்டலாம். கடந்த போட்டியில் இதே தவறை செய்து தான் ஆர்சிபி அணி தோல்வியடைந்தது. கேப்டன் டூப்ளசிஸே முதல் 6 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியது போன்று இருந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

2வது இன்னிங்ஸ் பேட்டிங்
2வது இன்னிங்ஸில் சற்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் பந்தில் வேரியேஷங்களை காட்ட முடிவதில்லை எனக்கூறுகின்றனர். எனவே இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது தான் சரியான முடிவாக இருக்கும். இப்படிபட்ட சூழலில் தான் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

உண்மை காரணம் என்ன
ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணி தான் 9 முறை இறுதிப்போட்டியில் வென்றுள்ளது. இதற்கு காரணம், முக்கியமான போட்டிகளில் 2வதாக பேட்டிங் செய்யும் போது அழுத்தம் ஏற்பட்டு சொதப்ப நேரிடலாம். எனவே முதலில் பேட்டிங் செய்து, அதற்கேற்றார் போன்று 2வது இன்னிங்ஸில் ஆடலாம். ராஜஸ்தான் அணியும் நடப்பு தொடரில் முதலில் பேட்டிங் செய்து அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால் தான் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்திருக்கலாம்.

ப்ளேயிங் 11 விவரம்
ராஜஸ்தான் அணி : யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுவேந்திர சாஹல்
குஜராத் அணி : விருதிமான் சாஹா, சுப்மன் கில், மேத்யூவ் வேட், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, சாய் கிஷோர், லாக்கி ஃபெர்க்யூசன், யாஷ் தயால், முகமது ஷமி


Click it and Unblock the Notifications











