Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தடை முதல் கேப்டன் பதவி வரை.. ஜடேஜா கேப்டனான கதை.. ராஜபுத்திர இளவரசனின் அசுர வளர்ச்சி

மும்பை: ஐபிஎல் தொடரில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஜடேஜா தற்போது கேப்டன் பதவி வரை உயர்ந்து சாதனை படைத்துள்ளார்.

Recommended Video

Ravindra Jadeja's Captaincy Records and Stats | CSK | OneIndia Tamil

ஜடேஜாவின் இந்த அசத்தல் பயணம் எளிதாக அமையவில்லை. பல இன்னல்கள், ரத்தம், வியர்வை சிந்தி தான் இந்த உயரத்துக்கு வந்துள்ளார்.

ஜடேஜா தாம் விளையாடும் காலத்தில் பல உயரத்தையும், பல சரிவுகளையும் கண்டுள்ளார். அதனை தற்போது நாம் காணலாம்.

ஜடேஜா அறிமுகம்

ஜடேஜா அறிமுகம்

விராட் கோலியின் அண்டர் 19 இந்திய அணியில் படை தளபதி போல் செயல்பட்ட ஜடேஜா தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் கலக்கினார். அப்போது மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் வார்னேவால் கண்டு எடுக்கப்பட்ட ஜடேஜா, அவரால் பட்டை தீட்டப்பட்டார். ராஜஸ்தான் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வெல்ல ஜடேஜா முக்கிய காரணம் வகித்தார்.

ஐபிஎல்லில் தடை

ஐபிஎல்லில் தடை

ஜடேஜா 2010ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன் வேறு அணிக்கு மாற முயற்சி செய்ததாக ராஜஸ்தான் அணி சார்பாக புகார் தரப்பட்டது. இதன் காரணமாக ஜடேஜாவுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தம்மை வளர்த்த அணியே தம் முதுகில் குத்திவிட்டதாக ஜடேஜா கடும் சோகத்தில் இருந்தார்.

சிஎஸ்கேவில் ஜடேஜா

சிஎஸ்கேவில் ஜடேஜா

2012ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக முதன் முதலில் விளையாடினார் ஜடேஜா. முதல் சீசனிலேயே பெரும் தாக்கத்தை அவர் ஏற்படுத்த, அதன் பின் ஜடேஜா சென்னை அணியின் அங்கமாகவே திகழ்ந்தார். ஜடேஜாவின் திறமையை கண்டறிந்த தோனி, 2013ஆம் ஆண்டின் போது அவரை சர் ஜடேஜா என்று கிண்டலடித்தார்,

ஜடேஜாவின் சரிவு

ஜடேஜாவின் சரிவு

ஒரு கிரிக்கெட் வீரர் வாழ்க்கையில் உச்சத்தை தொட்டால் பின் சரிவை கண்டு தானே ஆக வேண்டும். சென்னை அணியில் இந்திய வீரர்களில் தோனி, ரெய்னாவுக்கு அடுத்து 3வது வீரராக அணியில் உயர்ந்த ஜடேஜாவுக்கு சரிவு தொடங்கியது. 2015 மற்றும் 2018ஆம் ஆண்டு சீசனில் சரிவை கண்டார். குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஜடேஜா தனது பேட்டால் அடித்த மொத்த ரன்களே 89 ரன்கள் தான்.

தோனி ஆதரவு

தோனி ஆதரவு

பந்துவீச்சும் அந்த சீசனில் மோசமாக இருக்க ஜடேஜாவை அணியிலிருந்து நீக்க வேண்டும், ஜடேஜா தேவையில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் இதனை காதில் வாங்காத தோனி, ஜடேஜா சிஎஸ்கேவின் முக்கிய அங்கம் என்று கூறி தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி ஆதரவு அளித்தார். இதன் விளைவாக அந்த சீசனிலேயே ஜடேஜா பார்ம்க்கு திரும்பினார்.

ஜடேஜா வளர்ச்சி

ஜடேஜா வளர்ச்சி

இதன் பின்னர் ஜடேஜாவுக்கு ஏறுமுகம் தான். தனது பேட்டிங்கில் ஜடேஜா தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் ஜடேஜா என்ற பேட்ஸ்மேன் உயர தொடங்கினார். 2020ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா பந்துவீச்சு சுத்தமாக எடுப்படவில்லை. ஆனால் அப்போது பேட்டிங் மூலம் சரிக்கட்டினார் ஜடேஜா.

கேப்டன் ஜடேஜா

கேப்டன் ஜடேஜா

2021ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜாவின் பேட்டிங் காரணமாகவே சிஎஸ்கே பல போட்டிகளில் வென்றது. குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், அந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்சல் பட்டேல் ஓவரில் 37 ரன்கள் விளாசினார் ஜடேஜா, அணியில் ரெய்னாவின் முக்கியத்துவம் குறைந்ததால் தோனிக்கு பிறகு தற்போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Story first published: Friday, March 25, 2022, 8:36 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+