Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - கோலியுடன் சண்டை போட்டது ஏன்? அன்று இரவு நடந்தது என்ன? கம்பீர் பேச்சு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் களத்தில் எப்போதுமே ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். எதிரணி வீரர்களிடம் எப்போதுமே கோபத்துடன் நடந்து கொள்ளும் கம்பீர் களத்தில் சிரித்ததை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.

இதுபோன்று பேட்டிங்கில் கம்பீர் பல முக்கிய இன்னிங்ஸ் ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். ஆனால் அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்டு இருக்கும் கம்பீர் தற்போது பாஜகவில் இணைந்து டெல்லியில் எம்பி யாக இருக்கிறார்.

IPL - Gautam gambhir reveals about his fight between virat kohli


இருந்தும் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் மென்டராக பணிபுரிந்தார். இந்த தொடரின் போது ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கம்பீரும் விராட் கோலியும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்து கம்பீரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கம்பீர் என் அணியை வழிநடத்துபவன் என்ற முறையில் என்னுடைய வீரர்களை நான் தான் பாதுகாப்பேன். யாரும் என் வீரர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மற்றவர்களை விட நான் வித்தியாசமான நம்பிக்கையை கொண்டிருப்பவன். அன்று இரவு ஆட்டம் முடியும் வரை நான் வீரர்களின் சண்டையில் தலையிடவே இல்லை.

ஏனென்றால் களத்தில் நடக்கும் விஷயத்தில் தலையிட எனக்கு உரிமை கிடையாது. ஆனால் போட்டி முடிந்த பிறகும் எவரேனும் ஒருவர் ஆக்ரோஷமாக பேசி என்னுடைய வீரர்களை வம்பு இழுத்தால் அவர்களை பாதுகாக்க எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. இதுதான் அன்று நடந்தது என்று கம்பீர் கூறியிருக்கிறார்.

இந்த சண்டையில் நவீன் உல் ஹக், விராட் கோலி மோதிக்கொண்டிருந்த நிலையில் உலககோப்பை தொடரில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து நட்பு பாராட்டி கொண்ட சம்பவம் நினைவு கூரத்தக்கது. ஆனால் கம்பீர் இன்னும் அந்த மோதலை மறக்காமல் விராட் கோலியிடம் வம்பு இழுக்கும் வகையில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, December 9, 2023, 13:50 [IST]
Other articles published on Dec 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+