கெய்ல் அபார ஆட்டம்-9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி

பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் ரசிகர்களுக்கு மீண்டும் வான வேடிக்கை காட்டினார். குறிப்பாக கேரளாவின் பரமேஸ்வரன் வீசிய ஒரு ஓவரில் அவர் 37 ரன்களைக் குவித்து ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றார்.
முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் கெய்ல். 2வது பந்து நோ பால் ஆனது. ஆனால் அந்தப் பந்தையும் சிக்சருக்கு விளாசினார். 3வது பந்து போருக்குப் போனது. 4வது பந்தும் போர், ஐந்தாவது பந்தும், 6வது பந்தும் சிக்ஸருக்குப் பறக்க, 7வது பந்தை போருக்கு விரட்டி 37 ரன்களைக் குவித்தார் கெய்ல். வெறும் 16 பந்துகளை மட்டுமே சந்தித்து 44 ரன்களைக் குவித்தார் கெய்ல்.
அதேபோல மறு முனையி்ல 31 பந்துகளில் 52 ரன்களைக் குவித்தார் தில்ஷன். இவர்களது ஆட்டத்தால் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக ஆடிய கேரள அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து கெய்ல் அபாரமாக ஆடி வருவதால் பெங்களூரும் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வருகிறது. நேற்றைய வெற்றிக்குப் பின்னர் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications