ஐபிஎல் 2022ல் மாற்றம்? பயத்தில் தத்தளிக்கும் புதிய அணி..பிசிசிஐ எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை- விவரம்
சென்னை: ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணி பங்கேற்கிறதா? இல்லையா? என்பதில் இறுதிகட்ட முடிவு எட்டப்படவுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது.
இதற்காக இந்தாண்டு மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு அணியும், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிடுகிறது.

புதிய சர்ச்சை
புதிதாக வந்துள்ள 2 அணிகளும், ஏலத்தில் விடப்படும் வீரர்களில் யாரேனும் 3 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். அதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுல், ரஷித் கான் என முக்கிய வீரர்களிடம் தனது பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது. ஆனால் அகமதாபாத் அணி மட்டும் எந்தவித முயற்சிகளும் எடுக்க முடியாத சூழலில் உள்ளது. இதற்கு காரணம் அந்த அணி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தான்.

சட்டவிரோதம்
புதிய அணிகளுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ரூ.5,625 கோடி கொடுத்து அந்த நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோத நிறுவனங்களில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ-க்கு சிக்கல்
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பிசிசிஐ-க்கு மிகவும் நம்ப தகுந்த தகவல்கள் கிடைத்த காரணத்தால் அந்த அணி ஏலம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத் அணியின் விவகாரத்தை விசாரிக்க ஐபிஎல் நிர்வாகத்தின் சார்பின் ஒரு குழுவை அமைக்கவும் பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
Recommended Video

ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (04.12.2021) நடைபெறுகிறது. இந்த கூட்டதின் போது அகமதாபாத் அணி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி முடிவு காணப்படவுள்ளது. அதில் அகமதாபாத் அணியை சிவிசி நிறுவனம் வைத்திருக்குமா என்பது முடிவாகும். இல்லையென்றால் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்படும். இந்தாண்டு ஐபிஎல்-ல் பங்கேற்க முடியாத சூழலே கூட ஏற்படலாம். இதனால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications