ஐபிஎல்: பரம எதிரியை உற்சாக படுத்திய குர்னல் பாண்டியா - லக்னோ VS குஜராத் போட்டியில் சுவாரஸ்யம்
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் குஜராத், லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் அணி, லக்னோ அணியின் முன்வரிசை பேட்டிங்கை காலி செய்தது.
முகமது ஷமியின் அனல் பறக்கும் பந்துவீச்சில் கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மணிஷ் பாண்டே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தடுமாற்றம்
இதே போன்று அதிரடியாக விளையாட முற்பட்ட எவன் லீவிஸ் , சுப்மான் கில்லின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களத்துக்கு வந்த தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

நண்பர்களான எதிரிகள்
முதலில் அமைதியாக விளையாடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியை காட்டியது. குறிப்பாக தீபக் ஹூடா, பவுண்டரிகள், சிக்சர் என விளாசி ரசிகர்களை குதுகலப்படுத்தினார் இதனால் களத்திற்கு வெளியே டக் அவுட்டில் நின்ற அவரின் பரம எதிரியான குர்னல் பாண்டியா கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.

ஏன் மோதல்
ஏற்கனவே இவ்விருவரும் ஒரே அணிக்கு விளையாடிய போது மோதல் ஏற்பட்டதால், குர்னல் பாண்டியா மீது புகார் அளித்த தீபக் ஹூடா வேறு அணிக்கு விளையாடினார். ஏலத்தின் போதே இவ்விருவரும் ஒரே அணிக்காக விளையாடியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஆனால் இன்று ஹூடாவுக்காக குர்னல் பாண்டியா கைத்தட்டி பாராட்டிய சம்பவம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அடுத்தடுத்து அரைசதம்
தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி அடுத்தடுத்து அரைசதம் அடிக்க இறுதியில் குர்னல் பாண்டியா 21 ரன்கள் விளாச, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஆடுகளத்தில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடும்.


Click it and Unblock the Notifications