Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு கேட்ச் பார்த்திருக்க மாட்டீங்க.. ஆடி போன ரசிகர்கள்.. கபில்தேவை மிஞ்சிய சுப்மான் கில்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சுப்மான் கில் பிடித்த கேட்ச் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் அணியில் முகமது ஷமி துல்லியமான பந்துவீசி ராகுல், குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனையடுத்து ஆட்டத்தின் 3.3வது ஓவரில் வருண் ஆரூண் வீசிய பந்தை எவன் லீவிஸ் மிட் ஆஃப் திசையில் நோக்கி பெரிய ஷாட் ஆட முயன்றார்.

கபில்தேவ் கேட்ச்

கபில்தேவ் கேட்ச்

அப்போது பந்து ஆகாயத்தில் பறந்து சென்றது. அப்போது பவர் பிளே என்பதால் வீரர்கள் அனைவரும் உள் வட்டத்தில் தான் நின்றனர். இதனால் நிச்சயம் பவுண்டரி இல்லை சிக்சர் என ரசிகர்கள் நினைத்தனர். அப்போது இளம் வீரர் சுப்மான் கில், பந்தை கண்டதும் கபில் தேவ் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஓடியது போல் பின்நோக்கி ஓடினார்.

பாயந்து பிடித்தார்

பாயந்து பிடித்தார்

ஆனால் பந்து அப்போதும் அவர் கைக்கு எட்டாது என்று உணர்ந்த சுப்மான் கில், அப்படியே பறவை போல் பறந்து கேட்ச் பிடித்தார். இதனை கண்டதும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஓடி வந்து சுப்மான் கில்லை பாராட்டினர். சுப்மான் கில் அந்த கேட்சை விட்டுவிடுவார் என நினைத்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஆச்சரியத்தில் உரைந்தனர்.

பதிலடி

பதிலடி

ஐபிஎல் தொடர் தொடங்கி 3 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பேட்டிங், பந்துவீச்சு , ஃபில்டிங் என வீரர்கள் கலக்கி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் இப்படி கேட்ச் பிடித்து அசத்துவார்கள். இந்திய வீரர்கள் கைக்கு வரும் கேட்சை கூட விட்டுவிடுவார்கள் என்ற கேலி கிண்டல் ஒரு காலத்தில் இருந்தது.

பழைய காலம்

ஆனால் , அது எல்லாம் பழைய காலம் என்று சொல்லி வைத்து அடித்து வருகிறார்கள் இந்திய வீரர்களின் இளம் படை. முதல் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ஜாக்சன் அசத்த, இன்று ஃபில்டிங்கில் சுப்மான் கில் அசத்தினார். காயத்திலிருந்து குணமடைந்துள்ள சுர்மான் கில் 2018ஆம் ஆண்டு அண்டர் 19 உலககோப்பை தொடரில் விளையாடி அசத்தி, சீனியர் அணியில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 28, 2022, 20:33 [IST]
Other articles published on Mar 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+