For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் - சிஎஸ்கே Vs கேகேஆர் ரெக்காட்ஸ்.. வான்கடேவில் யார் கிங்? அசத்தலான புள்ளி விவரங்கள்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 26 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில், சிஎஸ்கே 17 போட்டிகளும், கொல்கத்தா 8 போட்டிகளும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், வேறு சில அசத்தல் புள்ளி விவரங்களை தற்போது காணலாம். கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

IPL 2022: சிஎஸ்கே vs கொல்கத்தா.. டாஸ் வென்றால் பேட்டிங் எடுக்கலாமா? வான்கடே பிட்ச் ரிப்போர்ட் இதோ! IPL 2022: சிஎஸ்கே vs கொல்கத்தா.. டாஸ் வென்றால் பேட்டிங் எடுக்கலாமா? வான்கடே பிட்ச் ரிப்போர்ட் இதோ!

வான்கடே ரெக்கார்ட்

வான்கடே ரெக்கார்ட்

இதே போன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த கொல்கத்தா வீரர் என்ற பெருமையை ஆண்டிரு ரஸில் பெற்றுள்ளார். வான்கடே மைதானம் கேகேஆர் அணிக்கு மோசமான அனுபவத்தையே தந்துள்ளது. கடைசியாக வான்கடேவில் கொல்கத்தா விளையாடிய 11 போட்டியில் 10 போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

ஐபிஎல் அணிகளிலேயே வான்கனடே மைதானத்தில் குறைந்த வெற்றி சதவீதத்தை வைத்துள்ள அணி என்றால் கொல்கத்தா தான். அதே சமயம் சென்னை அணிக்கு வான்கடே ராசியான மைதானமாகவே விளங்கியுள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டியில் 4 முறை சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை அம்பத்தி ராயுடு பெற்றுள்ளார்.

அதிக சிக்சர்

அதிக சிக்சர்

அம்பத்தி ராயுடு இதுவரை வான்கடே மைதானத்தில் 48 இன்னிங்சில் 885 ரன்களை விளாசியுள்ளார். இதன் மூலம் பொலார்டு, ரோகித் சர்மாவுக்கு பிறகு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போன்று ஆண்டிரு ரஸில் பிராவோ பந்துவீச்சில் இதுவரை 23 சிக்சர் விளாசியுள்ளார். இதனால் ரஸில் பேட்டிங் செய்யும் போது பிராவோக்கு பந்துவீச வாய்ப்பே தரக்கூடாது.

Recommended Video

IPL 2022: CSK vs KKR Possible Playing 11, Match preview | OneIndia Tamil
தோனி Vs சுழற்பந்துவீச்சு

தோனி Vs சுழற்பந்துவீச்சு

தோனியை இதுவரை கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி இதுவரை 3 முறை அவுட்டாக்கியுள்ளார். இதே போன்று சுனில் நரைன் 2 முறை அவுட் ஆக்கியுள்ளார். சுனில் நரைன் வீசிய 83 பந்துகளில் தோனி 44 ரன்களே விளாசியுள்ளார். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தால் வான்கடேவில் கூடுதல் சாதகம்.

Story first published: Saturday, March 26, 2022, 12:42 [IST]
Other articles published on Mar 26, 2022
English summary
IPL Here is the CSK vs KKR amazing stats and records at wankade ஐபிஎல் - சிஎஸ்கே Vs கேகேஆர் ரெக்காட்ஸ்.. வான்கடேவில் யார் கிங்? அசத்தலான புள்ளி விவரங்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X