Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் தோனியின் இமாலய சாதனை.. 100 நாட் அவுட்கள்.. வேறு யாராலும் தொட முடியாத மைல்கல்

கொல்கத்தா: ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் தொடமுடியாத மாபெரும் மைல்கல் ஒன்றை தோனி செய்திருக்கிறார். நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி கடைசி வரை களத்தில் நின்றார். அவர் 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு சிக்ஸர் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார். கடைசி வரை அவர் நாட் அவுட் ஆக இருந்ததன் மூலம் மாபெரும் மைல்கல் சாதனையைச் செய்திருக்கிறார். இது தோனியின் 100வது ஐபிஎல் நாட் அவுட் ஸ்கோர் ஆகும். வேறு எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஐபிஎல் வரலாற்றில் 100 முறை நாட் அவுட் ஆக இருந்தது இல்லை.

IPL History MS Dhoni Becomes First Player to Achieve Incredible 100 Not Outs Milestone

ஐபிஎல் தொடரில் அதிக முறை நாட் அவுட் ஆக இருந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பல ஆண்டுகளாகவே தோனி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் 100 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். அவர் 80 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் கைரன் பொல்லார்ட் இருக்கிறார். அவர் 52 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் தினேஷ் கார்த்திக் மற்றும் டேவிட் மில்லர் உள்ளனர். தினேஷ் கார்த்திக் 50 முறையும், டேவிட் மில்லர் 49 முறையும் நாட் அவுட் ஆக இருந்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் பெரும்பாலும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது வரிசையில் இறங்கும் பேட்ஸ்மேன்களே இடம் பிடித்து உள்ளனர். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஏபி டி வில்லியர்ஸ் 40 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். அவர் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 40 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். அவர் பத்தாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் துவக்க வீரராகவோ, மூன்றாம் வரிசை வீரராகவோ விளையாடியிருக்கிறார். அப்படி இருந்தும் அவர் 40 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் சிறப்பாகப் பந்துவீசியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியது.

டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபே 40 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். நேற்று ஐபிஎல் அறிமுகமான உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Thursday, May 8, 2025, 8:04 [IST]
Other articles published on May 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+