இந்த மேட்ச் IPL கிரிக்கெட்டில் சரித்திரத்தில் இடம் பெற்றது.மொத்தம்18 பவுண்டரிகள் ,17 சிக்ஸர்கள். கேமரோன் ஒயிட் வீசிய ஒரே ஒரு ஓவரில் கிடைத்த ரன்கள் 24 ஒரு சதம்.அஜித் அகர்க்கர் 3 / 25 .பவுலிங்கில் அசத்தினார்.புகழ் பெற்ற வீரர்கள் பங்கு பெற்றனர்.சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த மேட்ச் தான், ஐ பி எல் போட்டியின் துவக்க ஆட்டம்.
18.4.2008 ,விளையாடியது பெங்களூரில்.கே கே ஆர் , ஆர் சி பி அணிகள் மோதினடாஸ் வென்ற கேப்டன் ராகுல் திராவிட் முதலில் பீல்ட் செய்ய முடிவு செய்தார்.கே கே ஆர் டீமின் கேப்டன் சவுரவ் கங்குலியும், பிரெண்டான் மெக்கல்லும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.

போட்டியின் துவக்க பந்தை எதிர் கொண்டவர் கங்குலி. பந்து வீசியது பிரவீன் குமார். முதல் பந்து பெற்று தந்த முதல் 1 ரன் லெக் பை மூலம் வந்தது. முதல் ஓவர் ரன்கள் 3.தான் சந்தித்த முதல் ஓவரிலேயே அவருடைய எண்ணம் என்ன என்பதை துல்லியமாக காட்டி விட்டார், பிரெண்டான் மெக்கல்லும். மேட்சின் இந்த இரண்டாவது ஓவரை வீசியது சாஹீர் கான்.
பிரெண்டானின் பேட் பேசியது. நான்கு அடிகள். ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்க பந்துக்கள் மின்னல் வேகத்தில் பறந்தன.ரசிகர்களுக்கோ மகிழ்ச்சி, கொண்டாட்டம். சிறந்த பேட்டிங்கை கண்டு ரசித்ததில்.ஓவரின் இரண்டாவது பந்தில், போட்டியின் முதல் பவுண்டரி. மிட் விக்கெட் பகுதியில்.
மூன்றாவது பந்தும் 4 பெற்று தந்தது, அதே பகுதிக்கு பறந்து சென்று.
போட்டியின் முதல் 6. ஓவரின் நான்காவது பந்தில்.5 வது பந்தில் ஒரு 4. ஸ்கோயர் லெக் திக்கில்.
இந்த ஓவரில்
கே கே ஆர் அணிக்கு கிடைத்த ரன்கள் 18.
ஸ்கோர் 21 / 0
பிரெண்டான் மெக்கல்லும் 18
சவுரவ் கங்குலி 0.
பிரவீன் குமார் வீசிய அணியின் மூன்றாவது ஓவரில் 3 ரன்கள் கிடைத்தன.
நாப்க்கே போட்ட அணியின் 4 ஓவரில் கிடைத்த ரன்கள் 23.
ஸ்கோர் 50 / 0
பிரெண்டான் மெக்கல்லும் 35
சவுரவ் கங்குலி 5
இது வரையில் கங்குலி விளையாடியது 8 பந்துக்கள்.
பிரெண்டான் மெக்கல்லும் எதிர் கொண்டவை 16 பந்துக்கள்.
4 வது ஓவரில் முதல் பந்து 5 வைடு ரன்கள் கிடைக்க வழி காட்டியது.
அடுத்த பந்து ஸ்கோயர் லெக் பகுதியில் ஒரு பெரிய 6.
3 வது பந்தில் 4 ரன்கள். அடித்தவர் கங்குலி.
பைன் லெக் பகுதியில்.
கடைசி பந்தை எதிர் கொண்ட பிரெண்டான் தூக்கி எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் அடிக்க கிடைத்தது, ரன்கள் 6.
5 வது ஓவரில் 10 ரன்கள் வந்தன.
6 வது ஓவர் இரண்டாவது பந்தில் கங்குலி அவுட். பவுலர் கான். கேட்ச் ஸ்லிப்பில் பிடித்தது கல்லிஸ்.
10 ( 12 பந்துக்கள். 2 x 4 )
6 வது ஓவர். ரன் 1. விக்கெட் 1. ஸ்கோர் 61 / 1
பாண்டிங் 0
மெக்கல்லும் 41
7 வது ஓவர். ரன் 7.
ஸ்கோர் 68 / 1
பாண்டிங் 4
மெக்கல்லும் 44
8 வது ஓவர். ரன் 5
ஸ்கோர் 73 / 1
பாண்டிங் 6
மெக்கல்லும் 47
9 வது ஓவர். ரன் 4
ஸ்கோர் 77 / 1
பாண்டிங் 7
மெக்கல்லும் 50
ஸ்கோரின் வேகம் குறைந்தது. பவுலர்கள் கட்டுக் கோப்பாக பந்துக்கள் போட்டனர். ஆர் சி பி அணி வீரர்களின் பீல்டிங்கும் மெச்சும் படி இருந்தன.
5 ஆம் ஓவருக்கு பிறகு நான்கு , ஆறு ரன்களை காணவில்ல. ஆர் சி பி அணி ஆதிக்கம் செலுத்த துவங்கியது.
10 வது ஓவர். ரன் 10.
ஸ்கோர் 87 / 1
பாண்டிங் 9
மெக்கல்லும் 58
ஜோஷி பந்து வீசினார்.
5 வது பந்தை மெக்கல்லும் டீப் மிட் விக்கெட் திக்கில் அடித்தார். ரன்கள் 6.
12 வது ஓவரில் ஸ்கோர் 112 / 1
பாண்டிங் 20
மெக்கல்லும் 68
13 வது ஓவரில் கல்லிஸ் போட்ட பந்தில் பாண்டிங் அவுட். கேட்ச் பிடித்தது பிரவீன் குமார்.
20 ( 20 பந்துக்கள். 1 x 4 & 1 x 6 )
15 வது ஓவரில் கிடைத்த ரன்கள் 24.
ஸ்கோர் 154 / 2
மெக்கல்லும் 99
ஹஸ்சி 8
ஒயிட் போட்டி ஓவர். இந்த ஓவரில் ஹஸ்சி ஒரு நான்கு, மெக்கல்லும் ஒரு நான்கு, இரண்டு 6 அடித்தார்.
கே கே ஆர் அணி கை மறுபடியும் ஓங்க துவங்கியது.
போட்டியின் 16 வது ஓவரின் இரண்டாவது பந்து, ஐ பி எல் போட்டியின் முதல் சதம் பதிவாக காரணமாயிற்று. பந்து போட்டது நாப்க்கே. சதம் எடுத்தது பிரெண்டான் மெக்கல்லும்.
17 வது ஓவரில் கான் பந்தை சிக்ஸர் அடித்தவர் மெக்கல்லும்.
அந்த ஓவர் முடிவில் ஸ்கோர் 172 / 2
ஹஸ்சி 12
மெக்கல்லும் 113
நாப்க்கே போட்ட
மேட்சின் 18 வது ஓவரில் ஒரு பவுண்டரி. ஒரு விக்கெட். ஹஸ்சி அவுட். கேட்ச் பிடித்தது ஒயிட். பின் பக்க வாட்டில் ஓடி சென்று அருமையாக கேட்ச் பிடித்தார்.

கல்லிஸ் பந்து வீசினார் போட்டியின் 19 வது ஓவரை. 21 ரன் கொடுத்தார். கே கே ஆர் அணியின் ஸ்கோர் 200 ஐ தொட்டது.
200 / 3
ஹபீஸ் 5
மெக்கல்லும் 136
இந்த ஓவரில் ரசிகர்கள் கண்டது இரண்டு நான்குகள், இரண்டு 6 ரன்களை. ஒரு 4 எடுத்தது ஹபீஸ். இரண்டு 6 ஒரு 4 அடித்தது மெக்கல்லும் மிட் ஆன், லாங் ஆன் சிக்ஸர்கள் சென்று இறங்கின.
ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடினார்கள்.
போட்டியின் கடைசி ஓவர் போட்டவர் பிரவீன் குமார். 22 ரன்கள்.
மூன்று சிக்ஸர்கள். மிட் விக்கெட், உயர பறந்து ரசிகர்கள் மத்தியில், லாங் ஆன்.
அடித்தவர் மெக்கல்லும்.
முதல் மேட்சின் முதல் 20 ஓவர்கள் ஓவர்.
கே கே ஆர் அணி ஸ்கோர் 222 / 3
மெக்கல்லும் 158*
ஹபீஸ் 5*
ஆர் சி பி அணியில் விக்கெட் எடுத்த
பவுலர்கள்
சாஹீர் கான் 1 / 38
நாப்க்கே. 1 /40
கல்லிஸ் 1 / 48
பிரெண்டான் மெக்கல்லும், ஐ பி எல் போட்டியின் துவக்க
ஆட்டத்தின், துவக்க இன்னிங்சில் அட்டகாசமான ஆட்டத்தை பதிவு செய்தார்.
இன்னிங்ஸ் முழுவதிலும் ஆக்கிரமித்துக் கொண்டு பவுலிங் போட்ட எல்லா வீரர்களின் பந்துக்களை பதம் பார்த்தார்.
சிக்ஸர்களை பறக்க விட்டார். பவுண்டரிகள் விளாசினார்.
73 பந்துக்களில் 158 * ரன்கள் நாட் அவுட் அவரது சிறந்த ஆட்டத்திற்கு எடுத்துக் காட்டு.
எவ்வளவு முயன்றும், இவரது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை, ஆர் சி பி பவுலர்களால். ருத்ர தாண்டவம் ஆடி, திணறடித்தார் எதிரணி வீரர்களை.
223 ரன்கள் இலக்குடன் ஆர் சி பி அணி தங்களது பேட்டிங்கை துவங்கியது.
அவர்களுக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. முதல் விக்கெட் வீழ்த்தியவர் இஷாந் ஷர்மா.
ராகுல் திராவிட் அவுட்.
எடுத்த ரன்கள் 2
இரண்டாவது விக்கெட்டும் விரைவில் விழுந்தது. விராட்
கோலி. போல்ட் திண்டா. ரன் 1.
மூன்றாவது ஓவர் முடிவில் ஸ்கோர் 12 / 3
5 வது ஓவரில் ஆர் சி பி அணியின் முதல் சிக்ஸர் எட்டிப் பார்த்தது. அடித்தவர் கல்லிஸ். பவுலர் அகர்க்கர். எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் சென்றது பந்து. ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அடுத்த பந்தில் கல்லிஸ் அவுட். கேட்ச் பிடித்தது கார்த்திக்.
8 ( 7 பந்துக்கள். 1 x 6 )
அந்த ஓவர் முடிவில் ஸ்கோர் 24 / 3
ஒயிட் 0
வாஸிம் ஜாபர் 6
6 வது ஓவரில் அடுத்த விக்கெட் விழுந்தது. ஜாபர் அவுட். கேட்ச் பிடித்தது பாண்டிங்.
6 ( 16 பந்துக்கள் )
1, 2 ரன்கள் வந்துக் கொண்டு இருந்தன. ஆனால் டாட் பந்துக்கள் அதிகம்.
6 ஓவர்கள் முடிவில்
ஆர் சி பி அணி 4 விக்கெடுக்களை இழந்து 26 ரன்கள் எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தனர்.
ஒவ்வொரு ஓவருக்கும் எடுக்க வேண்டிய ரன்கள் 14 க்கும் மேல் இருந்தன.
கே கே ஆர் பவுலிங், பீல்டிங் சிறப்பாக இருந்தது.
எட்டாவது ஓவரில் அணியின் 5 வது விக்கெட் போயிற்று.
கங்குலி போட்ட பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார் மார்க் பவுச்சர்.
7 ( 9 பந்துக்கள். 1 x 4 )
ஓவர் முடிவில் ஸ்கோர் 38 / 5
ஒயிட் 4
அக்கில் 0
ஆர் சி பி அணி வீரர்கள் திணறிக் கொண்டு இருந்தனர்.
ரன்கள் அவ்வளவாக கூடவில்லை. ஓவர்கள் குறைந்துக் கொண்டு வந்தன. போத குறைக்கு விக்கெடுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.
9 வது ஓவரில் மேலும் பின்னடைவை சந்தித்தது ஆர் சி பி அணி.
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தனர்.
அக்கில், பாண்டிங் கேட்ச் பிடிக்க அகர்க்கர் பவுலிங்கில் அவுட். ரன் எடுக்கவில்லை.
அந்த ஓவரின் கடைசி பந்தில் சஹா கேட்ச் பிடிக்க ஒயிட் அவுட்.
6 ( 10 பந்துக்கள் )
ஸ்கோர் 43 / 7
10 , 11 வது ஓவர்களில் ஒரு ஒரு 4 ரன் வந்தது.
12 வது ஓவரில் நாப்க்கே ரன் அவுட்.
9 ( 10 பந்துக்கள். 1 x 4 )
13 வது ஓவர் ஷுக்ளா பந்து போட்டார். பிரவீன் குமார் ஒரு மிகப் பெரிய சிக்ஸர் அடித்தார். லாங் ஆன் பகுதியில் வெகு தூரம் தள்ளி விழுந்தது.
13 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 70 / 8
கான் 3
குமார் 12
14 வது ஓவரில் பிரவீன் குமார் லாங் ஆனில் ஒரு சிக்ஸர்.
முன்னதாக ஓவரின் முதல் பந்தில் சாஹீர் கான் போல்ட் கங்குலி. 3 ரன்கள்.
15 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 81 / 9
குமார் 18
ஜோஷி 3
16 வது ஓவர் முதல் பந்தில் ஜோஷி அவுட். விக்கெட் எடுத்தவர் ஷுக்ளா. கேட்ச் பிடித்தவர் விக்கெட் கீப்பர் பிரெண்டான் மெக்கல்லும், ரன்கள் 3.
கே கே ஆர் அணியில் விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தியவர்கள்.
அசோக் திண்டா 2 - 9
இ ஷர்மா 1 - 7
அஜித் அகர்க்கர் 3 - 25
கங்குலி 2 - 21
ஷுக்ளா 1 - 12
ஆர் சி பி அணி ஸ்கோர் 82
கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பிரெண்டான் மெக்கல்லும் முதல் ஆட்ட நாயகர் விருது பெற்றார் , அவரது வெகு சிறப்பான பேட்டிங்கிற்கு.துவக்க ஐ பி எல் , இந்த மேட்ச் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்தது குறிப்பாக கே கே ஆர் அணியின் சிறப்பான விளையாட்டால்.
வாசுதேவன், பெங்களூரு